அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உஷார் !

ஏப்-04
துபை மாநகரம் அதன் பல்வேறு காரணங்களால் உலகளாவிய மக்களால் விரும்பப்படுகிறது ஆனால் துபை உங்களிடமிருந்து விரும்பாத செயல்களும் சில இருக்கின்றன. இந்த சட்டங்களை மீறினால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படுவீர் ஜாக்கிரதை!

அலட்சியமாக கருதப்படும் எந்தெந்த குற்றங்களுக்கு எவ்வளவு திர்ஹங்கள் அபராதம் விதிக்கப்படுகின்றன என பார்ப்போம்.

1. பொதுவான சாலைகளில் குப்பையை போட்டால் - 500 திர்ஹம்
2. பொதுவான சாலைகளில் நீர் மற்றும் இதர திரவங்களை கொட்டினால் அல்லது சிந்தும் தன்மையுடைய குப்பைகளை ஒழுங்காக மூடாமல் வாகனத்தில் ஏற்றிச் சென்றால் - 500 திர்ஹம்
3. கழிவறை தவிர்த்த பிற இடங்களில் மல, ஜலம் கழித்தால் - 500 திர்ஹம்
4. பொதுவான இடங்களில் சாதாரணமாக அல்லது காரி எச்சில் துப்பினால் - 500 திர்ஹம்
5. சூயிங் கம் மென்று அதன் எச்சிலையோ அல்லது சூயிங்கத்தையோ பொது இடங்களில் துப்பினால் - 1,000 திர்ஹம்
6. அனுமதிக்கப்பட்ட இடம் தவிர்த்து பிற இடங்களில் கட்டிட இடிபாடுகள், தொழிற்றுட்பத் தயாரிப்பு கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றை கொட்டினால் - 5,000 திர்ஹம்
7. கட்டிடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை அடைக்காவிட்டாலோ அல்லது கழிவுநீர் வாகனத்தில் கொண்டு செல்லும் கழிவுநீர் பொதுவான சாலைகளில் சிந்தினால் - 10,000 திர்ஹம்
8. பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை கழிவுநீர் பாதையில், கழிவுநீர் தொட்டியில், நடைபாதையில், சாலையில் கொட்டினால் - 3,000 திர்ஹம்
9. எண்ணெய் வகைகள் மற்றும் கடல்வழி கழிவுகளை கடலுக்குள், கடற்கரையில், துறைமுகப் பகுதியில், கடற் கால்வாய்களில் எறிந்தால் - 500 திர்ஹம்
10. மரம், செடி, கொடிகள், தோட்டங்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை அதற்குரிய இடத்தில் அல்லாமல் வேறு இடங்களில் களைந்தால் - 500 திர்ஹம்
11. வாகனங்களை கழுவும் நீரை அதற்குரிய அனுமதிக்கப்பட்ட இடத்தில் விடாமல் பிற இடங்களில் விட்டால் - 100 திர்ஹம்
12. ஏர் கண்டிஷனர் கருவியிலிருந்து வடியும் மற்றும் பிற இடங்களிலிருந்து ஒழுகும் நீரை நடைபாதைகளிலோ, சாலைகளிலோ வடியுமாறு விட்டால் - 100 திர்ஹம்
13. குப்பைகளை திறந்தவெளியில் எரித்தால் - 1,000 திர்ஹம்
14. எந்தப் பொருளையாவது பொது இடங்களில், வீட்டுக் கூரைகளில், பால்கனிகளில், அமீரகத்தின் புற அழகையும் பெயரையும் கெடுக்கும் வகைகளில் தொங்கவிட்டாலோ, சேமித்து வைத்தாலோ, அலட்சியமாக எறிந்து விட்டு சென்றாலோ – 200 திர்ஹம்
15. வாகனங்கள் மற்றும் பிற பொருட்களை அஜாக்கிரதையாகவும், போக்குவரத்திற்கு இடஞ்சல் ஏற்படும் விதத்திலும், நடைபாதைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்திலும், அமீரகத்தின் அழகுக்கு களங்கம் ஏற்படும் விதத்திலும், சுத்தம் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் விதத்திலும் விட்டுச் சென்றால் - 200 திர்ஹம்
16. அரசு வழிகாட்டியுள்ளபடி எந்த ஒரு கட்டிடத்திலும் குப்பை கழிவுகளை சேகரிக்க அதற்கான தொட்டிகளையும், தனியான அறைபோன்ற இடவசதியையும் செய்து தராவிட்டால் - 1,000 திர்ஹம்
17. அரசு வழிகாட்டியுள்ளபடி கட்டிடங்களில் குப்பைகளுக்கான தனியிடங்களில் உள்ள குப்பை சேகரிக்கும் தொட்டிகளை அவ்வப்போது அகற்றாமலும், மீண்டும் அதே இடத்தில் வைக்காமலும், குப்பை சேகரிக்கும் அறைகளுக்கு தேவையான பாராமரிப்பு பணிகளை அவ்வப்போது செய்யாமலும் இருந்தால் - 500 திர்ஹம்
18. குடியிருப்பு கட்டிடங்களின் உட்பகுதியில் தேவைப்படும் பாராமரிப்பு பணிகள் மற்றும் அதன் மேற்பார்வை பணிகளை செய்யாமல் இருந்தால் - 500 திர்ஹம்
19. தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், ஹோட்டல்கள், பெரும் குடியிருப்பு பகுதிகளில் தேவையான குப்பை சேகரிப்பு தொட்டி வசதிகளை செய்யாவிட்டால் - 1,000 திர்ஹம்
20. பொது சுகாதாரத்திற்கும், உயிர் உடமைகளுக்கு கேடுவிளைவிக்கும் வகையில் சட்ட அறிவுறுத்தியுள்ளதை மீறி குப்பைகளை கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட பாதைகளை பயன்படுத்துதல், குப்பை தொட்டிகளை நிரம்பி வழியும் வகையில் கொண்டு செல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் - 1,000
21. தினந்தோறும் பொதுவான மற்றும் தனியார் பார்க்கிங் பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைக்காவிட்டாலும், பார்க்கிங் பகுதியை சுத்தமாக வைத்திருக்காவிட்டாலும், இந்தப் பணிகளை ஒழுங்காக மேற்பார்வை இடாவிட்டாலும் - 500 திர்ஹம்
22. பிறரால் களையப்படும் மறுசுழற்சி மற்றும் மறுஉபயோகம் செய்ய பயன்படும் பொருட்களை சேகரித்து வைக்க, வாகனங்களில் ஏற்றிச் செல்ல, பொது இடங்களில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் முறையான முன் அனுமதி பெறவேண்டும், அனுமதி பெறாதவர்கள் மற்றும் சுத்தம் தொடர்புடைய தரக்கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவோருக்கு – 5,000 திர்ஹம்
23. குப்பைத் தொட்டிகள், குப்பை லாரிகள் மற்றும் அது சார்ந்த தொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான பொருட்களை போட்டுச் செல்வோருக்கு – 1,000 திர்ஹம்
24. மாநகராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை உங்கள் இஷ்டத்திற்கு இடம் மாற்றினாலோ, வாகனங்களில் ஏற்றிச் சென்றாலோ – 200 திர்ஹம்
25. உங்களுக்கு தேவைப்படும் அல்லது மறுசுழற்சி செய்ய பயன்படும் பொருட்களை எடுப்பதற்காக மாநகராட்சியின் குப்பை தொட்டிகளை கிளரினால் - 500 திர்ஹம்
26. குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடம், அதை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகள் அல்லது அதன் தரைகளை சேதப்படுத்தினால் - 1,000 திர்ஹம்
27. குப்பைகளை போடுவதற்கு அல்லது குப்பைகளை சேகரித்து செல்லும் மாநகராட்சி வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் உங்களுடைய வாகனங்களை, பொருட்களை, கருவிகளை குறுக்கே நிறுத்தினால் - 1,000 திர்ஹம்
28. தனியார் நிறுவனங்களின் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி வந்து மாநகராட்சி குப்பை தொட்டிகளில் கொட்டினால் - 1,000 திர்ஹம்
29. முன்அனுமதி பெறப்பட்டு சேகரிக்கப்படும் மறுஉபயோக, மறுசுழற்சிக்கான பொருட்கள் முறையான அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து அதுவே இடைஞ்சலாக மாறினால் - 1,000 திர்ஹம்
30. வெற்றிலை மற்றும் பான் பொருட்களை தெரிந்தோ, தெரியாமலோ இறக்குமதி செய்தால், உடன் வைத்திருந்தால், விற்பனை செய்தால், சொந்த உபயோகம் அல்லது மூன்றாம் நபருக்காக வைத்திருந்தால் - 50,000 திர்ஹம்
31. மாநகராட்சி குப்பை தொட்டிகள் மற்றும் அதிலுள்ளவற்றை கிளரினால் - 500 திர்ஹம்
32. ரெடிமேட் காங்கிரீட் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அவற்றை சாலைகளில் சிந்திக் கொண்டு சென்றாலோ அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டாமல் பிற இடங்களில் கொட்டினாலோ – 50,000 திர்ஹம்
33. கழிவுநீரை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டாமல் திறந்த வெளிகளிலும், பிற இடங்களிலும் கொட்டினால் 100,000 திர்ஹம்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-