அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஏப்-11
துபையில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுவதற்கு தடை அமலில் உள்ளது. மொபைலில் பேசுபவர்களால் அவசரநிலையின் போது தங்களுடைய வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமலும் பிறரது உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படுத்துவதாலும் கண்காணிப்புக்களை போலீஸார் தீவிரப்படுத்தியும், பிடிபடுபவர்கள் மீது விதிமீறல் குற்றத்திற்காக அபராதங்கள் விதித்தும் வருகின்றனர் என்றாலும் சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் நடந்த 16,393 குற்றப்பதிவுகள் கொஞ்சம் கூட குறையாமல் கடந்த 3 மாதங்களிலும் 16,069 என்ற எண்ணிக்கையில் நடந்துள்ளது என்றால் இதன் வீபரீதத்தை புரிந்து கொள்ளாத ஓட்டுனர்களை என்னவென்பது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக இந்த வகை குற்றங்களுக்காக 60,364 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 200 திர்ஹம் அபராதமும் 4 கரும்புள்ளிகள் வழங்குதலும் நடைமுறையில் உள்ளன.

வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுபவர்கள் மட்டுமல்ல பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களை உபயோகிப்போர், தட்டச்சு மற்றும் குரல்வழி சாட்டிங் செய்வோர், வீடியோ பதிவுகளை ரசிப்போர் என அதிகரித்துள்ளனர் என்று துபை போலீஸார் தெரிவித்துள்ளதுடன் இனி வாகனம் ஓட்டும் போது மேக்கப் போடுவோர், உணவு உண்போர் மீதும் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 800 திர்ஹம் அபராதத்துடன் 4 கரும்புள்ளிகளை வழங்கும் சட்டமும் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிpவித்துள்ளனர்.

உங்களுக்கு மொபைல் போன் உபயோகம் செய்ய கட்டாய சூழல் ஏதும் ஏற்படின் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு உபயோகியுங்கள், மொபைல் போன்களால் உங்களுடைய மூளை செயல்பாடுகள் முடங்கிப்போக இடமளிக்காதீர் எனவும் துபை போலீஸார் புள்ளிவிபரங்களை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-