அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தொழிலாளர் தினத்தையொட்டி மே 1 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஊராட்சி தனி அலுவலர்களால் நடைபெற உள்ள கூட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அளித்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், அனைத்து ஊராட்சி தனி அலுவலர்களின் செயல்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும். அரசு அலுவலர்கள், கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதைக் கேட்டறிய வேண்டும்.
கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளராக உள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும். மேலும், அரசு நலத் திட்டங்களும் வழங்கி, அரசு நிர்வாகத்தில் உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிய வேண்டும். கூட்டம் நடைபெறுவதைக் கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் பற்றாளர்களும், மேற்பார்வையிட வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்துக்கு வழிவகுத்து உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-