அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

புதுடெல்லி:


இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை விற்பனை செய்து பிரபலமான சியோமி நிறுவனம் Mi ஃபேன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் சிறப்பு விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது. சியோமியின் Mi.com தளத்தில் இதற்கென பல்வேறு சாதனங்களை விற்பனைக்கு வழங்க சியோமி திட்டமிட்டுள்ளது.


ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையின் கீழ் ரூ.1 பிளாஷ் விற்பனையும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு இலவசங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவுள்ளது.ரூ.1க்கு கிடைக்கும் சாதனங்கள்:விற்பனையின் முதற்கட்டமாக ரூ.1 பிளாஷ் விற்பனை நடைபெறவுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ரூ.1க்கு வாங்க முடியும். இந்த சலுகை செயலியில் மட்டும் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் செயலியை டவுன்லோடு செய்து விற்பனையில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும். இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு சிறப்பு விற்பனை துவங்கும்.


Mi ஸ்டோர் செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 20 புத்தம் புதிய ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். இதே போல் மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் விற்பனையில் 40 Mi பேன்ட் மற்றும் 50 - 10,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க் சாதனங்களை ரூ.1 செலுத்தி வாங்க முடியும்.


ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனை:


ஒரு நாள் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரெட்மி 4A ரோஸ் கோல்டு மற்றும் ரெட்மி நோட் 4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை முறையே ரூ.5,999 மற்றும் ரூ.9,999 விலையில் வாங்க முடியும். இந்தியாவில் ஏற்கனவே பத்து லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மார்ச் 31-ந்தேதி முதல் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 6-ந்தேதி மதியம் 12.00 மணி முதல் விற்பனையில் கிடைக்கும். இதே நேரத்தில் ரெட்மி 4A ரோஸ் கோல்டு பதிப்பும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதர சலுகைகள்:சியோமி ரெட்மி 3S பிரைம், Mi மேக்ஸ் பிரைம் மற்றும் சியோமி Mi5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் Mi.com தளத்தில் வாங்க முடியும். இதே போல் சாஃப்ட் கேஸ் வாங்குவோருக்கு அதன் விலையில் இருந்து ரூ.100 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் Mi மேக்ஸ் பிரைம் வாங்குவோருக்கு வட்டியில்லா தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் Mi ப்ரோடெக்ட் இன்சூரன்ஸ் வாங்கும் போது ரூ.200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.


மற்ற சாதனங்களுக்கான சலுகைகள்:


சியோமி ஸ்மார்ட்போன், பவர் பேங்க் சாதனங்களை தவிர சியோமி ஏர் பியூரிஃபையர், இயர்போன்ஸ், VR Play, Mi பேன்ட் மற்றும் பல்வேறு இதர சியோமி சாதனங்களுக்கும் அதன் விலைக்கு ஏற்ப தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ப்ளூடூத் ஸ்பீக்கர், செல்ஃபி ஸ்டிக் உள்ளிட்டவற்றின் விலையில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.


சலுகை சீட்டுக்கள்:


சியோமி சிறப்பு விற்பனை ஏப்ரல் 6-ந்தேதி துவங்கும் முன்பே ஏப்ரல் 5-ந்தேதி வரை சலுகை சீட்டுக்களை சியோமி வழங்கி வருகிறது. சியோமி சிறப்பு தள்ளுபடி விற்பனை நாளில் சாதனங்களை வாங்குவோர் சலுகை டோக்கன்களை பயன்படுத்தி ரூ.50, ரூ,100, ரூ.200 மற்றும் ரூ.500 வரையிலான தள்ளுபடிகளை கூடுதலாக பெற முடியும்.


குறிப்பு:


பிளாஷ் விற்பனையில் உங்களுக்கு விருப்பமான சாதனங்களை வாங்க முன்கூட்டியே Mi.com தளம் மற்றும் செயலியில் உங்களின் டெலிவரி செய்யப்பட வேண்டிய சரியான முகவரி, பணம் செலுத்த நீங்கள் பயன்படுத்த இருக்கும் கார்டு தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-