அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இயற்கைக்கு மாறான முயற்சியில் UAE வெற்றி கண்டுள்ளது
எந்த வருஷமும் இல்லாமல் இந்த வருடம் பாலைவன நாடான UAE யில் நல்ல மழை பெய்து வருகிறது...! "Cloud Seeding" முறையில் செயற்கையாக மழை பொலியவைத்து வெற்றியும் கண்டுள்ளது.

#செயற்கை மழை போலியவைக்க முதலில் காற்றழுத்தத்தை உருவாக்குவது. எந்த இடத்தில் மழையை பெய்யச் செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அந்த இடத்தில் காற்றழுத்தத்தை ஏற்படுத்த வேண்டு்ம். அதன் மூலம் மழை மேகங்களை ஒன்றுகூட செய்வதே முதல் நிலை. கேல்சியம் கார்பைடு, கேல்சியம் ஆக்ஸைடு, உப்பும் யூரியாவும் கலந்த கலவை அல்லது யூரியாவும் அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை மேகங்களில் தூவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்க உதவுகின்றன.

இரண்டாவது நிலையில் மழை மேகங்களை அதிகரிக்க செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூட செய்ப்படுகிறது. இவ்வாறு செய்ய கால்சியம் குளோரைடும் சிலநேரங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ஸைடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிக்கட்டி பொடியாகும்.

மூன்றாவது நிலையில் மழை மேகங்களை குளிரச் செய்து அதிக அளவு மழை பெய்யச் செய்கின்ற வேதியல் பொருட்களை தூவுவது . இந்த நேரத்தில் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுகின்றனர். அவற்றை மேகங்களின் மேல் தூவினால் அவை குளிர்ந்துவிடுகின்றன. மழை மேகங்கள் குளிர்ந்தவுடன் நீர் துளிகளாக மழை பெய்ய தொடங்குகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-