அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

   
கடந்த (01.10.2014) அன்று இரவு நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக ஹாஜி T.S.E.லியாக்கத் அலி S/o எஹசானல்லா ஜமாத் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டர். துணை தலைவராக ஜனாப். A. ஹிதாயத்துல்லா S/o அப்துல் கரீம். செயலாளராக ஜனாப். A. பஷீர் அஹமது S/o அப்துல் முத்தலீப் துணை செயலாளராக ஜனாப். A. ஜாபர் அலி S/o அப்துல் முத்தலீப் பொருளாளராக ஜனாப். A. அப்துல்லா S/o அப்துல் வஹாப் மேலும் கொத்து நாட்டாண்மைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் வரும் (01.10.2017) அன்று நமது வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தனது தலைவர் பொறுப்பிலிருந்து  விலகுவதாக அறிவித்தார்.

அதன் அடிப்படையில் நேற்று (08.03.17) இரவு நடைப்பெற்ற கூட்டத்தில் T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தனது தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தற்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் -

உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மேலும் தன் பதவில் இருக்கும் போது ஏதேனும் தவறுதலாக யாரேனும் பேசி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்... என்று கூறுவிட்டு பதவியில் இருந்து விடைபெற்றார்.

ஹாஜி ஜனாப் லியாக்கத் அலி அவர்கள் இது வரை தலைவர் பதவியில் இருந்து சிறப்பாக செயலாற்றியதற்கு வி.களத்தூர்.இன் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய ஜமாத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. தகவல்:வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-