அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புதுடெல்லி(30 மார்ச் 2017): ஆதார் சட்டத்தின்படி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதார் அட்டை அவசியமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய சட்டப்படி 182 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்போர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக கருதப்படுவர். இத்தகையவர்கள் ஆதார் அட்டை எடுக்க உரிமையில்லை என்றும் அவர்களுக்கான உரிமைகள் சிறப்பு விலக்கின் அடிப்படையில் தொடர்ந்து கிடைக்கும் என விளக்கமளித்துள்ளனர்.

அதேவேளை ஏற்கனவே இந்நடைமுறை தெரியாமல் ஆதார் அட்டை எடுத்தவர்களின் நிலை குறித்து தெளிவு எதுவுமில்லாததுடன் எடுக்கப்பட்டுவிட்ட அந்த அட்டைகளை ரத்து செய்யவும் முடியாதாம். ஏனெனில் ஒருமுறை வெளியாகும் அந்த எண் நிரந்தரமானதாம். தெரிந்தோ, தெரியாமலோ ஆதார் அட்டை எடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்களை தண்டிக்கும் சட்டங்களும் ஏதுமில்லை என்றும் இந்திய அரசின் உயரதிகாரியான டாக்டர் அஜய் பூஷன் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார். இவர் தான் ஆதார் அட்டைகளை வழங்கும் மத்திய அரசின் தனிப்பட்ட அடையாள அட்டைகளின் ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

“According to Aadhar Act, only residents of India are entitled to get an Aadhaar number. NRIs cannot get an Aadhaar because they are not entitled to get it.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-