அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சமுதாயப்பணியில் சட்டமன்ற சமுதாயக்குரல்...........

இஸ்லாமிய திருமண பதிவு முறையில் தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திட மாவட்ட அரசு காஜிகளுக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வக்ஃபு வாரிய அமைச்சர் நிலோபர் கபிலை அவர்களை நேரில் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் K.A.M.முஹம்மது அபூபக்கர் M.L.A. வலியுறுத்தினார்.
இது குறித்த விவரம் வருமாறு:-
திருமண கட்டாய பதிவு சட்டம் நடைமுறைக்கு வந்தபின் தமிழகத்தில் மஹல்லா ஜமாஅத்துகளின் பன்னெடுங்காலமாக செய்து வரும் திருமண பதிவேடு (தஃப்தர்) முறையை அரசாங்கத்தில் பல்வேறு துறையினர் ஏற்க மறுத்து வருகின்றனர்.
பள்ளிவாசல் தஃப்தரில் பதிவு செய்தாலும் மீண்டும் பதிவு அலுவலகத்திற்கு சென்று திருமணங்களை பதிய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்களது மனைவியை அழைத்து செல்லும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
இச்சூழ்நிலையை நன்கு உணர்ந்த காரணத்தால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் M.A., Ex.M.P.அவர்கள் திருமண கட்டாய பதிவு சட்டம் வந்த நிலையிலேயே அன்றைய தி.மு.கழகரம் ஆட்சியில் இருந்த போது பல்வேறு இயக்கத்தைச் சார்ந்தவர்கள், உலமா பெருமக்கள் பங்கேற்ற கூட்டத்தில், 1880 ஆம் வருடத்திலிருந்து இந்தியாவில் நடைமுறையில் உள்ள காஜிகள் சட்டத்தை அரசு அங்கீகாரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி பேசினார்.
அந்த நேரத்தில் சில. இயக்கங்களை சார்ந்தவர்கள் மாறுபட்ட கருத்து கொண்டதின் காரணமாக அன்றைய சூழ்நிலை காஜிகள் சட்டம் அங்கீகரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே இஸ்லாமிய சமுதாயத்தின் திருமண பதிவேட்டு முறையில் அங்கீகார சான்று வாங்குவதில் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தலின் பேரில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காஜிகள், கூடுதல் காஜிகள் என இன்றைய தேதியில், தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 28 அரசு காஜிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு மாவட்டங்களிலும் விரைவாக மாவட்ட காஜிகள் நியமிக்க வேண்டுமென தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் K.A.M.முஹம்மது அபூபக்கர் B.Sc., M.L.A. அவர்கள் (22.03.2017) அன்று நிதிநிலை அறிக்கை குறித்த பொது விவாதத்தில் பங்கேற்று பேசிய போது, காஜிகள் சட்டத்தை அங்கீகரிக்கும்

வகையில் 2016 ஆம் வருடம் தமிழக அரசின் சிறுபான்மை நல அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஆணையை அரசு உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.
பள்ளிவாசலில் திருமணம் நடத்துதல், பதிவு செய்தல் மற்றும் அதனை பராமரிக்கும் பணிகளை காஜிகள் செய்து வருகின்றனர். எனவே மாவட்ட அரசு காஜிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு ருபாய் 20,000 மதிப்பூதியம் வழங்க வேண்டுமென சிறுபான்மை நல அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளதை நினைவு படுத்தி, தமிழக முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு பரிசீலனை செய்து முஸ்லிம் சமுதாய திருமண பதிவு முறைகளில் தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்கு முடிவு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பேசினார்.
மேலும், சட்டமன்ற உறுப் பினர் K.A.M.முஹம்மது அபூபக்கர் B.Sc., M.L.A. அவர்கள் தமிழக வக்ஃபு வாரிய அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் அவர்களை நேரில் சந்தித்து, காஜிகள் சட்ட அங்கீகாரத்திற்கு தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
இக்கோரிக்கையை விரைவாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள அரசு காஜிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தை வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்
இதனைத் தொடர்ந்து இன்று (27.03.2017) மீண்டும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செய லாளர் K.AM.முஹம்மது அபூபக்கர் B.SC., M.L.A., அவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு காஜி மௌலவி ஷாநவாஸ் கான் மஹ்லரி, தர்மபுரி மாவட்ட காஜி மௌலவி பஸல் கரீம் மலாஹிரி ஆகியோருடன் சென்று சந்தித்து விரிவாக கலந்துரையாடினார். காஜிகள் சட்டம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
இவ்விஷயத்தை தமிழக முதல்வர், நிதியமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று விரைவாக நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார்.
சிறைவாசி.

கோவை சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடும் அப்துல் ரஸாக்குக்கு வயது 40. மே 6-ந்தேதி சனிக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக K.A.M.முஹம்மது அபூபக்கர் B.Sc ., M.L.A.,விடம் அப்துல் ரஸாக்கின் தந்தை தெரிவித்த துடன், 90 நாள் பரோல் விடுப்பு வாங்கித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சிறைவாசி அப்துல் ரஸாக் வரலாற்று பாடத்தில் M.A.. பட்டமும், பொது நிர்வாக இயலில் M.A. பட்டமும் பெற்றவர். இவர் சிறையில் உள்ள கைதிகளுக்கு பாடம் நடத்தி அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளவர். இதனை சுட்டிக்காட்டி திருமணத்திற்காக 90 நாள் பரோல் அளிக்க ஏற்பாடு செய்யும்படி அமைச்சர் நிலோபர் கபிலிடம் K.A.M.முஹம்மது அபூபக்கர் B.Sc., M.L.A.,வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-