அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கத்தார் வாழ் அனைவரும் அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்ட ஆள் அடையாள அட்டையை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டவருக்கும் புலம்பெயர் தொழிலாளருக்கும் என அனைவருக்கும் இச்சட்டம் செல்லுபடியாகும் என்றும் வீட்டில், வேலைதளத்தில் அல்லது பொதுவிடங்களில் திடீரென நடத்தப்படும் சோதனைகளின் போது அடையாள அட்டையை காட்டி தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள தவறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இச்சட்டம் குழந்தைகளுக்கும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 10,000 கட்டார் ரியால் அபராதமாகவும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் தம்மை எந்நாட்டவர், என்ன தொழில் செய்பவர் போன்ற விடயங்களை உறுதிபடுத்துவதற்கு உள்ள ஒரே சட்ட ஆவணம் இவ்வடையாள அட்டை என்பதை நினைவில் வைத்து எப்போதும் அவதானத்துடன் நடந்துகொள்வதனூடாக தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்த தம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
அவ்வடையாள அட்டை கட்டார் நாட்டுக்குள் தொலைந்தால் உடனடியாக அப்பிரதேசத்தில் உள்ள மத்திய நிலையத்திற்கு சென்று விண்ணப்பப்படிவத்தை பெற்று அதனை நிரப்பி தனது கடவுச்சீட்டுடன்

ஒப்படைக்க வேண்டும். புதிய அடையாள அட்டைக்காக 200 கட்டார் ரியால் அறவிடப்படும்.
நாட்டுக்கு வௌியே தொலைந்தால், புதிய அடையாள அட்டையை மீண்டும் பெற்றுக்கொள்வது சற்று சிரமமான விடயம் ஆகும். தொலைந்த இடத்தை குறிப்பிட்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தொலைந்த நாட்டின் அதிகாரியொருவர் உறுதிபடுத்திய அறிக்கையின் பிரதியையும் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் 200 கட்டார் ரியாலை செலுத்தி புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் கட்டாரில் தொழில் புரிபவராக இருந்தால் அந்நாட்டில் வழங்கப்படும் ஆள் அடையாள அட்டையை எப்போதும் கூடவே வைத்திருந்தால் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.

(நன்றி வேலைத்தளம்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-