அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மார்ச்-20
துபையில் கூரியர் நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பைக் மெஸஞ்சர்கள் மற்றும் பைக் டெலிவரி ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. நிரம்பி வழியும் துபை போக்குவரத்தில் இத்தகைய பைக்குகள் பெறும் உதவிகரமாக விளங்குகின்றன.

அதேவேளை பின்பறம் பெட்டிகள் இணைக்கப்பட்ட பைக்குகளால் விபத்துக்களும் பெருகி வருகின்றன. 2015, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பைக் விபத்துக்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 824 பைக் ஓட்டுனர்கள் போக்குவரத்து குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர் மேலும் 786 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதையும் தொடர்ந்து துபை போக்குவரத்து துறை (RTA), துபை போலீஸ், துபை மாநகராட்சி மற்றும் துபை பொருளாதார வளர்ச்சித் துறை (DED) ஆகியவை இணைந்து புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

2017 ஜூன் 6 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் பைக்குகளுக்கான புதிய உத்தரவுகளின்படி,

1. பைக்குகள் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகள் 50*50*50 cm என்ற அளவிற்கு மேல் இருக்கக்கூடாது.
2. டெலிவெரி பெட்டிகளின் அனைத்து புறங்களிலும் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
3. இடைவெளி இல்லாமல் பைக்குடன் இறுக்கமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
4. டெலிவெரி பெட்டிகளை பைக்குடன் பொருத்த வெல்டிங் செய்யாமல் ஸ்க்ரூ, போல்ட், நட்டுக்களை கொண்டே இணைக்க வேண்டும்.
5. பெட்டியின் வெளிப்புறம் பிளாஸ்டிக் மேலுறை கொண்டு மூடப்பட்டும், பெட்டியின் முனைகள் கூர்மையில்லாமலும் இருக்க வேண்டும்.
6. பின்புறம் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
7. டெலிவெரி பெட்டிகளில் மின்னும் பட்டிகளை (Phosphoric reflector strip) ஒட்டியிருக்க வேண்டும்.
8. 20 மீட்டர் தூரத்திலிருந்தும் பிறர் படிக்கும் வகையில் பெட்டியில் தேவையான குறிப்புகள் எழுதியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்றாலும், புதிய உத்தரவுக்குள் மாற பைக் ஓட்டிகளுக்கு 2018 மார்ச் 6 ஆம் தேதி வரை கருணை அடிப்படையில் அவகாசமும் தரப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-