அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வளைகுடா நாடுகள் என்றாலே அடர்த்தியான‌ பாலைவனமும், பெட்ரோலும் நினைவுக்கும் வரும் என்ற நிலையை தாண்டி யுஏஇல் பெய்து வரும் தொடர் மழையால் பசுமை சூழலும் நினைவுக்கும் வரலாம் என்ற நிலை உருவாகி வருகிறது.சர்வதேச ஆய்வு முடிவுகளின்படி அமீரகத்தில் மழையளவு கடந்த சில ஆண்டுகளில் சதவீதம் 10-30 % அதிகரித்துள்ளது. ஒரு மாத காலமாக அமீரகத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. கோடை காலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து துபாய்,அபுதாபி, அல் அய்ன், ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் குளிர்ச்சியாக உள்ளது.

இங்கு வருகை தந்துள்ள‌ சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். பாலைவனம் நிறைந்த பகுதியில் இது போன்று தொடர்ச்சியாக மழை பெய்து வருவது சர்வதேச அளவில் இயற்கை வல்லுநர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மேக விதைப்பு தொழில் நுட்பம் மூலம் கூடுதல் மழை பொழிய வைக்கப்பட்டுள்ளது .20சதவீதம் வரை அதிக அளவில் மழை வரவழைக்கப்பட்டுள்ளது

மேக விதைப்பு (cloud seeding) என்ற முறையில், மேகங்களில் செயற்கையாக சில இரசாயன பொருட்களை கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள்.. இதில் உபயோகப்படுவது சொல்லக்கூடிய இந்த தொழில்நுட்பமானது, கோடைக் காலங்களில் பயன்படுத்த முடியாது. ஆனால், மழை பெய்யும் வாய்ப்பு இருக்கும்போது இந்த மேகங்களை மேலும் செறிவூட்டி அதிக‌ மழைக்கு வழிவகுக்கும். வளிமண்டலவியல் நிலநடுக்கவியல் தேசிய மையத்தை (NCMS) சேர்ந்த வானியல் மற்றும் மேக விதைப்பு நிபுணரான டாக்டர் அகமது ஹபீப் கூறியதாவது;

இவ்வருட தொடக்கமான‌ 2017 ஜனவரி முதல் 58 முறை மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளத் ஆகவும் கடந்த வாரம் துவங்கி மூன்று நாட்களில் மட்டும் 10 முறைக்கு மேல் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள கூடுதல் பெய்ய செய்துள்ளோம். இதனால் பெருமளவில் மழை அளவு அதிகரித்துள்ளது.மேக விதைப்பு நடவடிக்கைகள் அமீரகத்தில் மழை அதிகரிக்க ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளது என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-