அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மார்ச்-5
ஜித்தாவில் செயல்படும் இந்திய தூதரகத்தின் சார்பாக நேற்று சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட பாஸ்போர்ட் குறைதீர் முகாமில் (Open forum to brings passport issues to the fore) சுமார் 1000 க்கு மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இம்முகாமில், பாஸ்போர்ட்டில் காணப்படும் எழுத்துப் பிழைகள், பெயர் மாற்றங்கள், பெற்றோர் பெயர்களை சரிசெய்தல், மனைவி மற்றும் கணவர்களின் பெயர்களை சரிசெய்தல் மற்றும் இணைத்தல், பிறந்த இடம் மற்றும் தேதியில் அவசியமான மாற்றங்களை செய்து தருதல் ஆகியவை ஆவணங்களின் அடிப்படையில் உடனுக்குடன் சரிசெய்து தரப்பட்டன.

மேலும், பிறந்த தேதிக்கும் பாஸ்போர்ட்டில் உள்ள தேதிக்கும் இடைவெளி 5 வருடத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளாக இருப்பின் அத்தகைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதுடன் சவுதியின் சட்டங்களும் பிறந்த தேதியில் 5 வருடங்களுக்கு மேற்பட்ட முரண்களை ஏற்றுக்கொள்ளவதில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டன.

இம்முகாமில் கலந்து கொள்வதற்காக தபூக், அப்ஹா, தாயிப் போன்ற தொலைதூர பிரதேசங்களிலிருந்தும் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்று சென்றனர். மேலும் இம்முகாமில் பாஸ்போர்ட் புதுப்பித்தலின் போது போலீஸ் விசாரணை என்ற பெயரில் மிகுந்த காலதாமதம் செய்யப்படுவதாகவும் இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்திய கவுன்சல் னெஜரல் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் துணை கவுன்சலர் ஜெனரல் முஹமது ஷஹீத் ஆலம், கவுன்சலர் ஆனந்தகுமார் மற்றும் தூதரக அதிகாரிகள் இம்முகாமில் கலந்து கொண்ட இந்தியர்களுக்கு தேவையான ஆலோசணைகளை வழங்கினர். மேலும், மலையாள அமைப்புகளும் இந்தியர்களுக்கு தேவையான கள உதவிகளை செய்தனர்.

Source: Saudi Gazette
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-