அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜித்தா(31 மார்ச் 2017): சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்காக வழங்கப் பட்டுள்ள பொது மன்னிப்பை உபயோகப்படுத்தி நாட்டுக்கு திரும்பி செல்லுமாறு இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.


சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் 90 நாட்களுக்கு தங்களது நாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று சவூதி அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி கடந்த புதன்கிழமை முதல் இது அமுலுக்கு வந்துள்ளது.

இக்காமா புதுப்பிக்காதவர்கள், சிகப்பு கேட்டகிரியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஸ்பான்சர் மரணித்தவர்கள் அல்லது ஸ்பான்சரை கண்டுபிடிக்க இயலாதவர்கள் என அனைவரும் கையில் பாஸ்போர்ட் இருந்தால் லேபர் ஆபீஸ் உரிமத்துடன் எக்ஸிட் அடித்து சொந்த செலவில் டிக்கெட் பெற்று நட்டுக்கு செல்லலாம். பாஸ்போர்ட் இல்லாதவர்கள் இந்திய தூதரகத்தை அனுகினால் எமெர்ஜென்சி பத்திரம் மூலம் இந்திய தூதரக ஆலோசனையின் பேரில் நாட்டுக்கு திரும்ப செல்லலாம்.

மேலும் ஹஜ் மற்றும் உம்ராவில் வந்து நாட்டுக்கு செல்லாதவர்கள் விமான டிக்கெட்டுடன் நேரடியாக விமான நிலயம் சென்றால் போதும் அங்கு எக்ஸிட அடித்து நாட்டுக்கு செல்லலாம்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாரு இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. மீறினால் மன்னிப்புக் காலக்கெடு முடிந்த பின்பு கடும் தண்டனைக்கு உள்ளக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-