அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


பெரம்பலூர் அருகே, கண்டெய்னர் லாரி மோதியதில் பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள கானக்கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் பாலசுப்ரமணியன் (55). இவர், பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித் துறையில் இளநிலை பொறியாளராக (நீர்வள ஆதாரம்) பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் நடைபெற்று வரும் நீர்த்தேக்க திட்டப் பணியை பார்வையிடுவதற்காக, பெரம்பலூரிலிருந்து கொட்டரை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர்- அரியலூர் சாலையில் உள்ள அருமடல் பிரிவுசாலை அருகே சென்றபோது, அரியலூர் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது கீழே விழுந்த பாலசுப்ரமணியன் மீது லாரி ஏரியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வேல்முருகன் அளித்த
புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுர்ஜித் சிங்கை (41) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-