அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...முதல் முறையாக வி.களத்தூரை சேர்ந்த ”முஹம்மது இப்ராஹிம்” மருத்துவ பட்டத்தை பெற்றார்! எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதலிடம் இவர் ஆவார்!

வரலாற்றில் முதல் முறையாக வி.களத்தூரை சேர்ந்த Dr. முஹம்மது இப்ராஹிம் அவர்கள் பல் மருத்துவ BDS (Bachelor of Dental Surgery) பட்டத்தை பெற்றார். மேலும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதலிடம் பெற்று இரு வெற்றிகளை பெற்று ஊருக்கும் தமது குடும்பதிற்கும் பெருமை சேர்த்து உள்ளார்! வி.களத்தூரின் முதல் மருத்துவ பட்டத்தை பெற்ற பெருமையை பெற்றார்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழா இன்று (18/03/2017) சென்னையில் மாலை நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக Mr. R.VIJAYAKUMAR, Dr.M.SAI BABA, Mr.B. VIKRAMAN, Mr. KRISHNA V GIRI, Dr.K.SIVAN கலந்து கொண்டனர்.
நமதூரை சேர்ந்த (மர்ஹீம்) K. அப்துல் சமது (மகன் வழி) மற்றும் (மர்ஹீம்) TMK முஹம்மது ஹனிபா (மகள் வழி) அவர்களின் பேரனும் A. சர்புதீன் - ஹபிபுன்னிஸா அவர்களின் மகனும் ஆகிய Dr. முஹம்மது இப்ராஹிம் ஆவார். தற்போது மில்லத்நகரில் வசித்து வருகிறார்கள்.
பல் மருத்துவம் BDS (Bachelor of Dental Surgery) படிப்பு ஐந்து ஆண்டு காலம் ஆகும். சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த Dr. முஹம்மது இப்ராஹிம் இவர் இரு வெற்றிகளை குவித்து உள்ளார்.
அவர் படித்த ஐந்து ஆண்டுகளும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் படிப்பில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதனால் அவருக்கு சிறப்பு கோல்டு மாடல்ஸ் ( GOLD MEDALIST ) வழங்கப்பட்டது. மற்றும் பல் மருத்துவம் BDS (Bachelor of Dental Surgery) பட்டம் பெற்றார்.
மருத்துவத்துறையில் நம்மவர்கள் குறிப்பாக வி.களத்தூர் வாசிகள் அதிகம் வரமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் Dr. முஹம்மது இப்ராஹிம் என்கிற நமதூர் வாலிபர் ஒருவர் இத்துறையில் பட்டம் பெற்று இருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு வி.களத்தூர்.இன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-