வி.களத்தூர். மார்ச் 05. நமது ஊரில் கடந்த வருடம் சரியாக மழை பெய்ய வில்லை. இதனால் நமது ஊரில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை மனதில் கொண்டு மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்த முடிவு செய்யப்பட்டது. கடந்த வார ஜூம்மா தொழுகை முடிவின் போது இரண்டு பள்ளியிலும் வரும் ஞாயிறு நமது ஊர் கல்லாற்றில் காலை 7:30 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் படி இன்று நமது ஊர் கல்லாற்றில் நபி வழியில் 7:45 மணிக்கு மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைப்பெற்றது. தொழுகையை வி.களத்தூர் பேஷ் இமாம் அப்துல் ராஷித் ஹழ்ரத் அவர்கள் நடத்தினார்கள். பின் குத்பா பேருரை மற்றும் துஆ களை மில்லத் நகர் பேஷ் இமாம் அஸ்ரப் அலி ஹழ்ரத் அவர்கள் ஓதினார்கள். இதில் வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர்ஜமாத் நிர்வாகிகள் வி.களத்தூர்,மில்லத் நகர் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
யா அல்லாஹ் எங்களுடைய இந்த தொழுகையை ஏற்று எங்கள் மீது கருணை பொழிந்து நாங்கள் தொழுத அந்த வறண்ட ஆற்றில் அதிவிரைவில் வெள்ளம் பெருக்கெடுத்தோட செய்வாயாக !!. ஆமீன்

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.