அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி #Saudi
ரியாத்தில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டு இருந்த இந்திய பெண் மீட்கப்பட்டு நேற்று குஜராத் மாநிலம் கொண்டுவரப்பட்டார்.
இந்தியா முழுவதும் பெண்களை ஏமாற்றி வெளிநாட்டவர்களுக்கு குறிப்பாக வளைகுடா நாட்டவர்களிடம் விற்பனை செய்யும் கும்பலின் வலைவீச்சானது பரவிஉள்ளது என்ற கவலைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தை சேர்ந்த பெண் சவுதியில் பாலியல் அடிமையாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு தரகர்களை போலீஸ் கைது செய்து உள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் வீட்டு வேலைக்காக துபாய்க்கு அனுப்பட்டு உள்ளார். அவருக்கு மாத சம்பளம் ரூ. 40 ஆயிரம் என ஆசைவார்த்தை கூறப்பட்டு உள்ளது. ஆனால் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒருவனிடம் பெண் விற்பனை செய்யப்பட்டு உள்ளார். ரியாத்தில் பெண் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். தவறாக நடத்தப்பட்டு உள்ளார் என்று அம்மாநில மந்திரி தெரிவித்து உள்ளார். இப்போது குஜராத் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாதிக்கப்பட்ட பெண். இதுவரையில் வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு என அடிமையாக்கப்படும் சம்பவங்களில் தென் இந்தியாவினர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் இதுபோன்று சிக்கிக் கொள்ளும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இப்போது நாட்டின் பிற பகுதியிலும் கடத்தல் கும்பலின் வலைவீச்சு விரிவிக்கப்பட்டு உள்ளது.

“வளைகுடா நாடுகளுக்கு கடத்தல் என்பது தொடர்பான வழக்குகள் தென் மாநிலங்களில் தான் பதிவாகும். குஜராத்தில் நாங்கள் அதிக முகவர்களின் பெயர்களை ஆய்வு செய்து வருகிறோம், கைது செய்யப்பட்டு உள்ள இருவரிடம் பெறப்பட்ட தகவல்கள் மூலம் விசாரிக்கப்படுகிறது என குஜராத் மாநில மந்திரி தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையிடம் தெரிவித்து உள்ளார். குஜராத் போலீஸ் விசாரணையை விரிவு படுத்தி உள்ளது. தொடர்பு வெளியாகினால் பிற மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுதாசாமா என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பெண்ணின் நிலையை படித்த பின்னர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசிடம் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே போலீசார் மும்பை மற்றும் குஜராத்தில் இருந்து பெண்ணிற்கு துபாய் செல்லும் ஆசைவார்த்தை கூறி இரு முகவர்களை கைது செய்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு வளைகுடாவில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாவது பெண் இவராவார். பக்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரெட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு வீட்டு வேலைக்காக செல்பவர்கள் கொடுமை படுத்தப்படுவதும், சுரண்டப்படுவதும் தொடர்வதாக ஆர்வலர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

“வளைகுடாவில் வீட்டு வேலை செய்பவர்கள் ஒரு விலங்குகளை போன்று நடத்தப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அவர் எங்கு இருந்தார் என்பது கூட தெரியாது. பாதுகாப்பாக நாட்டிற்கு திரும்ப அழுது கொண்டே இருந்து உள்ளார். வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும்,” என்று இந்திய அரசியல்வாதியும் சவுதியில் தொழிலில் ஈடுபட்டு உள்ளவருமான ஸ்ரீனிவாஸ் கூறிஉள்ளார். இவரே இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவியவர். பாதிக்கப்பட்ட பெண் தோல்கா மாவட்டத்தை சேர்ந்தவர், இதுபோன்று வளைகுடா நாடுகளுக்கு பெண்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்து உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-