அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

முஸ்லிம்களின் ஹஜ் புனிதப் பயணத்தின் டிக்கெட் கட்டணம் ஏறக்குறைய 20 சதவீதம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஹஜ் புனிதப்பயணத்துக்கு அரசு வழங்கும் மானியத்தை அரசு படிப்படியாக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து இந்த ஆண்டு அரசு பலசலுகளையும் மானியங்களையும் திரும்பப் பெறுவதால், டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது.

இது குறித்து மும்பையில் உள்ள ஹஜ் பயணக்குழுவின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி அட்டாஉர் ரஹ்மான் கூறுகையில், “ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை படிப்படியாக அமல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இதனால், இந்த ஆண்டு டிக்கெட் கட்டணத்தை அதிகரித்து, பயணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் மானியத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம்.

இதன்படி, டிக்கெட் கட்டணம் ஒரு நபருக்கு மெக்கா, மெதீனா சென்று வர 20 சதவீதம் அதாவது, ரூ.15 ஆயிரம்வரை அதிகரிக்கலாம். ஆனால், கட்டணம் உயர்வு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

விரைவில் விமானப் பயணக் கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்’’ என்று தெரிவித்தார்.

தெலங்கானாம மாநில ஹஜ் குழு கூறுகையில், “ கடந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு டிக்கெட்கட்டணமாக ரூ. 56 ஆயிரம் ஆனது. இந்த ஆண்டு ஏறக்குறைய ரூ. 71 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

கடந்த ஆண்டு ‘கிரீன்’ பிரிவுக்கு ரூ.2லட்சத்து 20 ஆயிரத்து550 கட்டணமும்,அசிஜியா பிரிவுக்கு ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 850 ஆனது. இந்த இரு பிரிவுகளிலும் பயணம் செய்பவர்களும் இந்த முறை டிக்கெட் கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-