அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இங்கு நரைமுடியைப் போக்கும் என்று நினைத்து நாம் கண்மூடித்தனமாக பின்பற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இளமையிலேயே நரைமுடி வந்துவிடுவதால், பலரும் இளம் வயதிலேயே முதியவர்கள் போன்ற தோற்றத்தைப் பெறுகிறார்கள். இந்த நரைமுடியைப் போக்க பலரும் தலைமுடிக்கு ஹேர் டைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஹேர் டைகளில் கெமிக்கல்கள் இருப்பதால், முடியின் ஆரோக்கியம் பாழாகும் என்பதை அறிந்து பலரும் இயற்கை வழிகளைப் பின்பற்றுவார்கள்.
அதிலும் ஒருசில இயற்கைப் பொருட்கள் நரைமுடியைப் போக்கும் என்று கண்மூடித்தனமாக பின்பற்றுவார்கள். ஆனால் அனைத்துமே நரைமுடியைப் போக்கலாம். இங்கு நரைமுடியைப் போக்கும் என்று நினைத்து நாம் கண்மூடித்தனமாக பின்பற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கறிவேப்பிலை
விலைக் குறைவில் எளிதில் கிடைக்கக்கூடிய கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், கறிவேப்பிலை சிலருக்கு அழற்சியை உண்டாக்கி, நரைமுடியைப் போக்குவதற்கு பதிலாக அழற்சி தீவிரமாக்கும். இருப்பினும், கறிவேப்பிலை நரைமுடியைப் போக்குகிறதோ இல்லையோ, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எலுமிச்சை
பொடுகைப் போக்க பயன்படுத்தப்படும் எலுமிச்சையை, சிலர் நரைமுடியைப் போக்கப் பயன்படுத்துவார்கள். ஆனால், எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நரைமுடியைப் போக்குவதற்கு பதிலாக, தோல் அழற்சியை உண்டாக்கும் என மருத்துவர் அமித் கூறுகிறார்.

தயிர்
நரைமுடியைப் போக்க தயிரைப் பயன்படுத்துவீர்களா? ஆமெனில், முதலில் அதை நிறுத்துங்கள். உண்மையில் தயிரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை பொடுகைப் போக்குமே தவிர, நரைமுடியைப் போக்காது.

பூண்டு
நரைமுடியைப் போக்க பயன்படுத்தும் மற்றொரு பிரபலமான பொருள் தான் பூண்டு. ஆனால், இதில் உள்ள அல்லிசின், கொலாஜென் உற்பத்தித் தூண்டி தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்குமே தவிர, நரைமுடியை மறைக்காது.

வெங்காயம்
தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் வெங்காயம். இது நரைமுடியைப் போக்கும் என்று சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால் அதில் உள்ள அதிகப்படியான சல்பர், தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்துவதோடு, தலைமுடி எளிதில் உடைவதைத் தடுக்குமே தவிர, நரைமுடியை எல்லாம் போக்காது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-