பெரம்பலூர் நகரில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீயிட்டு வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் செக்கடித் தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் மகள் பாரதி (22). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் பயின்று வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பாரதி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.இதுகுறித்து வெள்ளையன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.