அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மார்ச்-01
துபையின் அமுதசுரபிகளாக பார்க்கிங் கட்டணங்களும் டோல்கேட்களும் விளங்குகின்றன என்றால் மிகையல்ல, அது யாருக்கு என்பதும் தெரிந்த ஒன்றே!


இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் உள்ளது போல் கடந்த 2017 பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையிலேயே அடுத்தடுத்து அமைந்துள்ள அல் ஸபா (Al Safa) மற்றும் அல் பர்ஸா (Al Barsha) ஸாலிக் கேட்டுகளில் (Salik Toll Gates) தனித்தனியாக 4 திர்ஹம் என மொத்தம் 8 திர்ஹங்கள் ஒவ்வொருமுறையும் வெட்டப்படுகின்றதும் அறிந்ததே ஆனால் இதிலிருந்து தப்பித்து மாற்றுப்பாதையில் எவ்வாறு பயணிப்பது என்பது குறித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸாலிக் கேட்டுகள் குறித்தும் தற்போது கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதிவேக போக்குவரத்து நெடுஞ்சாலையான ஷேக் ஜாயித் சாலையில்,

1. பெரும் வணிக நிறுவனங்களும், சர்வதேச வணிகர்களும் பயனுறும் வகையில் வாகனங்களின் போக்குவரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் அல் ஸபா, அல் பர்ஸா என பிரித்து ஸாலிக் கட்டணம் வெட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

2. அபுதாபி அமைத்து விரைவில் திறக்கப்படவுள்ள ஷேக் முஹமது பின் ராஷித் எனும் புதிய 62 கி.மீ நெடுஞ்சாலை இரு எமிரேட்டுகளின் எல்லையான ஷைஹ் சொஹைப் (Saih Shoaib) என்ற இடத்தில் நிறைவுறுவதாலும், இதில் வரும் துபை, ஷார்ஜா மற்றும் பிற எமிரேட்டுகள் செல்ல வேண்டிய வாகனங்கள் ஷேக் ஜாயித் சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளதால் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடனும்,

3. அல் ஸபா மற்றும் அல் பர்ஸா ஸாலிக் பிரிக்கப்பட்டுள்ளதால் ஷேக் ஜாயித் சாலைகளை பயன்படுத்துவோர் மாற்றுப்பாதைகளான அல் கைல் ரோடு (Al Khail Road), ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு (Sheikh Mohammed Bin Zayid Road) மற்றும் எமிரேட்ஸ் ரோடுகளை (Emirates Road) தேர்ந்தெடுப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸாலிக்கை தவிர்க்க உதவும் மாற்றுப் பாதைகள்:
1. கர்ஹூத் பிரிட்ஜ் (Garhoud Bridge) (மக்தூம் பிரிட்ஜை) தவிர்த்துவிட்டு துபை கிரீக் ரோடு (Dubai Creek Road) செல்ல விரும்புபவர்கள் ஷிண்டாக டனலை (Shindhaga Tunnel) பயன்படுத்தலாம்.

2. மக்தூம் பிரிட்ஜ் (Maktoum Bridge) அருகிலுள்ள மிதவை பாலத்தை (Floating Bridge) பயன்படுத்துவது மற்றொரு வழி.

3. ராஸ் அல் கோர் (Ras Al Khor Road) மற்றும் அல் கைல் ரோடுகளை (Al Khail Road) பயன்படுத்தியும் ஸாலிக்கை தவிர்க்கலாம்.

ஸாலிக் கேட்டுகள் அமைவிடம் குறித்த விபரங்கள்:
அனைத்து ஸாலிக் டோல்கேட்டுகளிலும் ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போதும் 4 திர்ஹம் கணக்கிலிருந்து வெட்டப்படும்.

1. அல் பர்ஸா (Al Barsha)
2. அல் ஸபா (Al Safa)
3. அல் கர்ஹூத் (Al Garhoud)
4. ஏர்போர்ட் டனல் (Airport Tunnel)
5. அல் மக்தூம் (Al Maktoum)
(சனிக்கிழமை முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 6 மணிவரையும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 9 வரையும் ஸாலிக் கட்டணம் இல்லை)

6. அல் மம்ஸார் சவுத் (Al Mamzar South)
(அல் மம்ஸார் சவுத் மற்றும் நார்த் கேட்டுகள் வழியாக ஒரு மணிநேரத்திற்குள் அதே திசையில் (On Same Direction Only) பலமுறை சென்றாலும் ஒரு முறை மட்டுமே ஸாலிக் கட்டணம் வெட்டப்படும்)

7. அல் மம்ஸார் நார்த் (Al Mamzar North)
(அல் மம்ஸார் சவுத் மற்றும் நார்த் கேட்டுகள் வழியாக ஒரு மணிநேரத்திற்குள் அதே திசையில் (On Same Direction Only) பலமுறை சென்றாலும் ஒரு முறை மட்டுமே ஸாலிக் கட்டணம் வெட்டப்படும்)

குறிப்பு: ஏர்போர்ட் டனல் மற்றும் மம்ஸரில் அமைக்கப்பட்டுள்ளவை புதிய ஸாலிக் டோல்கேட்டுகளாகும்.

ஸாலிக் கட்டணத்திலிருந்து முழுவிலக்குப் பெற கீழ்க்காணும் வகைகளின் கீழ் வரும் மாற்றுத்திறனாளிகள் துபை போக்குவரத்து துறையிடம் (RTA) விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

1. மனநல குறைபாடு உள்ளவர்கள் (Mental disabilities)
2. உடல்நல குறைபாடு உள்ளவர்கள் (Physical disabilities)
3. ஆட்டிஸம் எனும் மதி இறுக்கம் உள்ளவர்கள்
(Autism)
4. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். (Visual disabilities)

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-