அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மார்ச்-6
அமீரகத்தின் தேசிய அடையாள அட்டையான எமிரேட்ஸ் ஐடியை (Emirates ID) பல்வேறு திட்டங்களுக்கும் பயன்படுத்தும் நடைமுறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது எமிரேட்ஸ் ஐடியை மருத்துவ இன்ஷூரன்ஸ் கார்டுகளுக்கு பதிலாக மருத்துவ ஆலோசணைகள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் வாங்கவும் பயன்படுத்தும் நடைமுறையை முதன்முதலாக அரசுடன் இணைந்து அமீரகத்தில் இயங்கும் ஓமன் இன்ஷூரன்ஸ் எனும் தனியார் நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

மேலும், அமீரக தேசிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான 'டமான்' (Daman) அதற்கான பூர்வாங்கப்பணிகள் மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் அதுவும் எமிரேட்ஸ் ஐடி வழியாகவே சேவை வழங்கவுள்ளது. பிற தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் தற்போது எமிரேட்ஸ் ஐடியுடன் தங்கள் உறுப்பினர்களின் விபரங்களை இணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே துபை விமான நிலையங்களில் பாஸ்போர்ட்டுக்கு பதிலாக 127 ஈ-கேட்டுகளில் (e-gates) எமிரேட்ஸ் ஐடிகளை பயன்படுத்தி அமீரகத்திற்குள் உள்நுழையவும், வெளியேறவும் (immigration counters) பயன்படுத்தப்பட்டு வருகிறது.2016 நவம்பர் மாதம் வரை சுமார் 234,000 பயணிகள் இவ்வசதியை பயன்படுத்தியுள்ளனர். மேலும் விரைவில் ATM கார்டுகளாக பயன்படுத்தவும், ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வசதியும் (e-payments) எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்பட உள்ளது.

அதிரை நியூஸில் முன்பு எமிரேட்ஸ் ஐடிகள் விமான நிலைய ஈ-கேட் கார்டுகளாகவும் பயன்படுகின்றன என்பது குறித்து வெளியான செய்தி:

துபாய் விமான நிலைய ஈ-கேட்டை எமிரேட்ஸ் ஐடியை பயன்படுத்தி பயணிகள் ஈசியாக கடக்கலாம் !

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-