அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,: பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த தங்கவேல்-மல்லிகா தம்பதியின் மூன்றாவது மகள் ஐஸ்வர்யா(22). இவர் பெரம்பலூர் பெரிய கடைவீதியிலுள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்தார். வேலை முடித்து குரும்பலூர் வழியாக மேலப்புலியூர் செல்லுகிற பஸ்களில் ஊருக்குச் சென்று வநவ்தார். அப்போது மேலப்புலியூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரோடு நட்புரீதியாக அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்மூலம் மேலப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு அது காதலானது. ஐஸ்வர்யா பார்த் திபனின் வீட்டிற்கு அடிக்கடி
சென்று வந்துள்ளார்.

இருவரும் காதலித்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா கோவை அருகேயுள்ள ஜின்னிங் மில்ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்தார். கடந்த 11ம் தேதி கோவையிலிருந்து குரும்பலூர் வந்த ஐஸ்வர்யா, 12ம்தேதி காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை. ஐஸ்வர்யா பார்த்திபன் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என நினைத்த பெற்றோர்நேற்று முன்தினம் நாவலூரிலுள்ள பார்த்திபன் வீட்டிற்குச்சென்று விசாரித்துள்ளனர். அங்கு பார்த்திபன் கடந்த 12ம் தேதியே வெளிநாடு சென்றுவிட்டார்
.
உங்கள் மகளைப்பற்றி எங்களுக்குத் தெரியாது, வெளியூர் போயிலிருந்தால் திரும்பி வந்துவிடுவார் எனக் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று குரும்பலூர், நாவலூர் இடையே, குரும்பலூரைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான வயல் கிணற்றில் ஐஸ்வர்யா சடலமாக மிதந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் கொடுத்தப் புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து, ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டாரா, தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார். ஐஸ்வர்யா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதனிடையே ஐஸ்வர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்திற்குச் சென்று, ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கிறோம். எனவே நாவலூரைச்சேர்ந்த பார்த்திபனின் பெற்றோரை அழைத்து விசாரித்து குற்றவாளிகளைக் கைதுசெய்யவேண்டும் என புகார் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரம்பலூர், குரும்பலூர், நாவலூர் பகுதியில் பெரும் பரபர
ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-