அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு நிறுவனமான எடிசலாட் தொலைதொடர்பு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போது இந்நிறுவனம் தகாபுஃள் எனப்படும் இஸ்லாமிய ஷரியதுக்குட்பட்ட விபத்து காப்பீட்டு திட்டத்தை 8/3/2016 அன்று அறிவித்து அதன்படி ப்ரீபெய்டு (செல்) நம்பர் வைத்துள்ளவர்கள் மாதம் 1 திர்ஹம் செலுத்தினால், விபத்தில் மரணமடைந்தாலோ,நிரந்தர ஊனமுற்றாலோ 20,000 திர்கம்ஸ் (தற்போதைய இந்திய மதிப்பில் 3,70,000) வழங்கப்படுமென அறிவித்துள்ளது.
தொழிற்சாலை,வாகன இன்னும் பல அனைத்து விபத்துகளுக்கும் இத்திட்டம் பொருந்தும். இயற்கை மரணங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
இதில் பயனடைய மாதம் ஒரு திர்ஹம் உங்கள் அலைபேசி கணக்கிலிருந்து பிடிக்கப்படும்.வயது வரம்பு 18 முதல் 64 வரை. ஒரு நபர் ஒரு மொபைல் எண்ணில் மட்டும் பயன்பெறலாம்.ஒவ்வொரு வருடமும் இதனை புதுப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் எடிசலாத் பிரிபெய்டு சந்தாதாரர்கள் TAK என்று டைப் செய்து 1012 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்,அல்லது 101 என்ற கஸ்டமர் கேர் நம்பரை தொடர்பு கொள்ளவும்!
இத்திட்டம் ஆக்டிவேட் செய்யப்பட்ட உடன் உங்கள் பாலிசி ரெஃபரன்ஸ் நம்பர் உதாரணமாக பின்வருமாறு TAKXXXXXX உங்கள் மொபைலுக்கு வரும்.அதனை கவனமாக சேமித்து வைக்கவும்.இந்த நம்பரைக் கொண்டே கிளைம் பண்ண முடியும் என்பதால், இப்பாலிசியைப் பற்றி உங்களது உறவினர்கள், தெரிந்தவர்களிடம் முன்பே கூறிவிடுங்கள்.
முழுமையான தகவல்களுக்கு:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-