அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

முஸ்லிம்கள் தினமும் ஐந்து நேர தொழுகையை நிறைவேற்றுவார்கள். மசூதிக்கு சென்று குனிந்து, நிமிர்ந்து மற்றும் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுவார்கள். இது பார்ப்பதேற்கே ஒரு வியப்பாக இருக்கும்.
ஏனென்றால், இது ஒரு உடற்பயிற்சிப் போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தும். குனிந்து மற்றும் தலையை தரையில் வைத்து வணங்குவார்கள். இந்த முறையை தினமும் பின்பற்றினால், முதுகு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
அதாவது, கிறிஸ்தவ மதம் மற்றும் யூத மதங்களிலும் இதுபோன்ற முறைகள் இருக்கின்றன. அதையும், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, இஸ்லாமிய வழிபாட்டு முறையைப்பற்றி ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
“தொழுகை முறையின் ஒவ்வொரு அசைவுகளும் யோகா மற்றும் உடற்பயிற்சி முறைகளையே வெளிப்படுத்துகின்றது. இந்த முறையை தினமும் பின்பற்றும் பொழுது, முதுகு வலி குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது அமெரிக்காவில் உள்ள பின்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முஹம்மது கஸாவென் தெரிவித்துள்ளார்.
வணக்க வழிபாடுகள் உடல்ரீதியான சோர்வு மற்றும் கவலையை போக்க உதவுகின்றது. அதே நேரத்தில், வணக்க வழிபாடுகளில் சக்திமிகுந்த மருத்துவ குணங்கள் இருக்கின்றது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
மேலும், தரையில் தலை வைத்து வணங்கும் முறை லோவர் பேக் பெயின், மூட்டு மற்றும் சதைப்பகுதிகளில் உள்ள வலிகள் குணமடைவதற்கு உதவுகின்றன. அதேப்போன்று, உடலமைப்பு முறையிலும் நல்ல ஒரு மாற்றம் ஏற்படுகின்றது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது. இந்த ஆய்வு “இண்டர்நேஷனல் ஜர்னல்” என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-