
போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்களை பிடிக்க ஏற்கனவே பலவகையான நவீன ரேடார் கேமிராக்களை நிறுவியிருக்கும் துபை போலீஸ் தற்போது தடம் மாறி முன்னேறிச் செல்லும் ஓட்டுனர்களை (Lane Jumpers) பொறிவைத்து பிடிக்கும் புதியவகை கேமிராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறி 'ஊடே ஊடே புகுந்து' தடம்மாறி மாறி விளையாட்டுக்காட்டும் டிரைவர்களை சுமார் 1000 மீட்டருக்கு முன்பிருந்தே கண்காணித்து உடனுக்குடன் வீடியோ மற்றும் படங்களையும் எடுத்துத் தள்ளிவிடும் அப்புறம் ஒவ்வொரு முறையும் 200 திர்ஹம் அபராதமும் 2 கரும்புள்ளிகளையும் பெற்று அதற்குரிய தண்டனையை மட்டும் அனுபவித்தால் போதுமாம்.
கடந்த வாரம் பரீட்ச்சார்த்த முறையில் அல் ரெபாத் சாலையில் (Al Rebat Street) மட்டும் நிறுவப்பட்ட இந்த கேமிரா ஒரு வாரத்தில் சுமார் 3000 பேர்களையே ஆசையோடு படமெடுத்துள்ளது என்றால் அதன் வேகத்தை பார்த்துக் கொள்ளுங்கள் விவேகமாக வண்டியை ஓட்டுங்கள்.
கடந்த வருடம், 2,90,336 லேன் மீறல் போக்குவரத்து குற்றங்கள் பதியப்பட்டுள்ளன என்றும், இதனால் 145 வாகன விபத்துக்கள், 7 உயிர் பலி மற்றும் 78 பேருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளதென்று துபை போலீஸ் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.