அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... வி.களத்தூர்பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரங்களிலும், கால்வாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு தென்னை மரம் மற்றும் அருகே உள்ள கூலித் தொழிலாளிகளான கவியரசன், அண்ணாதுரை ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன.

மழை அளவு: பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம் - 49 மி.மீ, பெரம்பலூர் - 69 மி.மீ, வேப்பந்தட்டை - 6 மி.மீ, தழுதாழை - 42 மி.மீ, பாடாலூர் - 17 மி.மீ என மொத்தம் 183 மி.மீட்டரும், சராசரியாக 36 மி.மீட்டரும் மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக பெரம்பலூர் நகரின் பெரும்பாலான இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. மேலும், இரவு முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-