அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்:இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில்  பல்வேறு இடங்களில் நீர்நிலைகள், மரங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் துபாயில் பாலைவனத்தின் நடுவே பறவைகள் வசிக்கும் வகையில் மிகப்பெரிய செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. துபாய் அல்குத்ரா பகுதியில் பாலைவனம் சூழ்ந்த இடத்தின் நடுவில் சோலையாக 10 ஹெக்டருக்கும் அதிகமான‌ இடத்தில் அழகிய செயற்கை ஏரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு ஆயிரக்கணக்கான அரிய பறவைகள் வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இப்பறவைகள் இப்பகுதியின் மனிதர்களால் எவ்வித இடையூறும் ஏற்படாத அளவில் சிறப்பாக இந்த ஏரி அமைய பெற்றுள்ளது. வெளிநாடுகளிலிருந்து 130க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கிறது.இயற்கை வளர்ச்சிக்கு துபாயில் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் துபாயில் மழை பெய்யும் சராசரி அதிகரித்துள்ளது.-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-