அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் கடந்த 2012-2013 ம் ஆண்டு ரூ. 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்குழாய் கிணற்றை காணவில்லை என அப்பகுதியை சேர்ந்த  சாகுல் ஹமீது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளர்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், கடந்த 2012-2013 ம் ஆண்டு ரூ. 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்குழாய் கிணற்றை மட்டும் காணவில்லை என்றும், அதனை மர்ம நபாகள் யாரோ திருடி சென்றுவிட்டதாகவும், அதனை கண்டுபிடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து தண்ணீர் பஞ்சத்தை போக்கும்படி மனுவில் கோரியுள்ளார்,
நன்றி : காலை மலர் பெரம்பலூர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-