அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




மார்ச்-02
அமீரகத்தில் 14 சீட்டர் எனப்படும் மினிவேன்கள் பயணிகள் போக்குவரத்திற்காக பல கம்பெனிகளில் ஊழியர்களை (Staff) ஏற்றி வரவும், பட்டான்களால் பயணிகளுக்கான ஷேர் டேக்ஸிக்கள் போன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும் சில வருடங்களுக்கு முன் 9 சீட்டராகவும் குறைத்தும் 100 கி.மீ வேகத்திற்குள் மட்டுமே இயக்கப்படவும் உத்தரவிடப்பட்டு நடைமுறையில் உள்ளன.

2013 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வரவும் இவ்வகை வேன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட 2016 ஆம் ஆண்டில் மட்டும் இவ்வகை வேன்களால் சுமார் 79 விபத்துக்கள் மூலம் 198 பேர் மரணமடைந்துள்ளனர் 152 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், சில ஓட்டுனர்கள் சட்டவிரோதமாக 18 முதல் 20 பேர் வரை கூட ஏற்றியும் செல்கின்றனர். 2016 ஜூலை மாதத்தில் நடந்த ஒரு விபத்தில் மட்டும் 7 பேர் கொல்லப்பட்டும் 13 பேர் காயமும் அடைந்தனர்.

மேற்காணும் அசம்பாவித நிகழ்வுகள் மற்றும் மினிவேன்களில் அவசரகால கதவுகள் இல்லாதவை போன்ற பல அம்சங்களையும் கணக்கிடப்பட்ட அமீரக மத்திய போக்குவரத்து கவுன்சில் (Federal Traffic Council( 2018 ஆண்டு ஜனவரி முதல் முற்றிலும் பயணிகள் போக்குவரத்திற்கு தடை செய்தும், வெறும் சரக்கு வாகனமாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும் உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது விரைவில் சட்டமாகும் என்பதால் பயணிகள் போக்குவரத்தின் கீழ் இவ்வகை வேன்களுக்கான பதிவுகளையும் (Registration) நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-