அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஹஜ்ஜுக்கு சைக்கிளில் பயணம்;


வாணியம்பாடியிலிருந்து மக்கா வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்ள இந்த பெரியவர்(படம்) முடிவுசெய்து பயணத்தை தொடங்கியுள்ளதாக செய்தி பார்த்தோம்.
இந்தியாவிற்கும் சவூதிக்கும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவு இருக்கும் நிலையில் வயதான பெரியவர் இந்த முயற்சி எடுத்துள்ளது அவரது உரிமை எனினும், இலகுவான பயணத்திற்கு வழி இருக்கும்போது தம்மைத் தாமே வருத்திக்கொண்டு இதுபோன்று கஷ்டப்படுவதை மார்க்கம் ஊக்கப்படுத்துகிறதா என்பதை சிந்திக்க வேண்டும்.

எனினும் இந்த பெரியவருக்காக அனைவரும் துஆ செய்யவும்

அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;
ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள்.
'(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!' என்று மக்கள் கூறினார்கள்,
நபி(ஸல்) அவர்கள் 'இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி எண்:1865.
.அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-