அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற தன் மனைவியை மீட்டு இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என அப்பெண்ணின் கணவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (42) இவர் மனைவி ரஞ்சிதா.
இந்த தம்பதிகளின் மகள் திருமணத்துக்கு பணம் தேவைப்பட்டதால் அதை சமாளிக்க வெளிநாட்டுக்கு சென்று வீட்டு வேலை செய்ய முடிவெடுத்தார் ரஞ்சிதா.அதன்படி ஒரு ஏஜன்சி மூலம் மாதம் 30000 சம்பளம் பேசப்பட்டு சவுதி அரேபியாவுக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளார்.
கடந்த 7 மாதங்களாக ரஞ்சிதா சவுதியில் படும் துன்பங்கள் ஏராளம். அங்கு அவர் வீட்டு வேலை செய்யும் வீட்டில் அவருக்கு சம்பளம் தராமல் கடுமையாக வேலை வாங்கியுள்ளனர்.
மேலும், அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அவர் அங்கிருந்து வேறு இடத்துக்கு வேலைக்கு மாற்றப்பட்டார்.
இப்படியே 37 வீடுகளில் அவர் சம்பளம் இல்லாமல் வேலை செய்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் ரஞ்சிதா வேலை செய்யும் வீட்டிலிருந்து தப்பித்து பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இது குறித்து ரஞ்சிதாவின் கணவர் பாஸ்கரன் கூறுகையில், என் மனைவி தவறான நபர்கள் மூலம் சவுதி அரேபியா சென்று மிகவும் துன்பபடுகிறார்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்னிடம் அவர் போனில் அழுது கொண்டே பேசுவார் என கூறியுள்ளார்.
மேலும், பெங்களூர் காவல் நிலையத்தில் நான் போராட்டம் நடத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் என் மனைவி இந்தியா வர உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். நன்றி: உண்மையின் பக்கம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-