
எண்ணை வளம் நிறைந்த பணக்கார நாடு சவுதி அரேபியா. அந்நாட்டின் மன்னராக சல்மான் பின் அப்துல் அஜீஸ் பதவி வகிக்கிறார்.
அவர் ஆசியா கண்டத்தில் உள்ள 7 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். முதலாவதாக மலேசியாவில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
இந்த வாரம் இந்தோனேசியா செல்கிறார். அங்கு சுற்றுலா பகுதியான பாலி தீவில் ஆடம்பர விடுதியில் தங்குகிறார். ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அது குறித்து மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
மன்னர் சல்மானுடன் 1000 பேர் பயணம் செய்கின்றனர். அவர்களில் 25 இளவரசர்கள், 10 மந்திரிகள் அடங்குவர். இவர்களுடன் 1 மாதம் சுற்றுப் பயணம் மேற் கொள்கின்றார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.