அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மார்ச்-6
கிங் பஹத் காஸ்வே (King Fahad Causeway) எனப்படும் கடற்பாலம் மட்டுமே பஹ்ரைன் தீவை பிற உலக நாடுகளுடன் சவுதி வழியாக இணைக்கும் ஒரே சாலை வழிப்பாதை. இந்த கடற்பாலமே அரபுலகின் அதிக வாகன நெரிசல் உள்ள பாலமாக விளங்குகிறது. இந்தப் பாலம் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் நாள் திறக்கப்பட்டது.

இந்தப் பாலத்தின் நடுவே இருபுறமும் அமைந்துள்ள சவுதி மற்றும் பஹ்ரைன் நாடுகளின் இமிக்கிரேசன் அலுவலகங்களில் அனைவரும் நின்று செல்ல வேண்டியிருப்பதால் வாகனங்கள் தேங்கி நேரம் விரயமாகின்றன. இனி இமிக்கிரேசன் கிளியரன்ஸ், வாகன சோதனை மற்றும் கஸ்டம்ஸ் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இரு நாடுகளுக்கும் பொதுவாக ஒரே அலுவலகத்திலேயே முடிக்கப்படும்.

இந்த சிறப்பு வசதிக்காக தற்போது ஆரம்பமாக 3 மாதங்களுக்கு ஒரே ஒரு டிராக்கில் (Tracks) மட்டும் இச்சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டு பின் படிப்படியாக பிற டிராக்குகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. மேலும், சில டிராக்குகளை புதிதாக அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

2015 ஆம் ஆண்டு சவுதி தரப்பில் வெளியிடப்பட்டிருந்த தகவலின்படி, வளைகுடா நாடுகள் (GCC) என அழைக்கப்படும் சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மட்டுமே தங்களின் தேசிய அடையாள அட்டைகளை விமான நிலையங்களில் நடைமுறையிலுள்ளது போல் தானியங்கி ஈ-கேட்டுகளின் (e-gate) வழியாக பயன்படுத்தி மேற்சொன்னவாறு உள்நுழையவோ, வெளியேறவோ முடியும் மற்ற நாட்டவர்கள் வழமைபோல் இருபுற இமிக்கிரேசன் அலுவலகங்களின் நின்றே செல்ல வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-