அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...Add caption

 தூத்துக்குடி மாவட்டம் , செய்துங்கநல்லூரில் இந்து முன்னனியினர் அட்டகாசம்.
முஸ்லீம்கள் மீது தாக்குதல்!
4 முஸ்லிம்கள் படுகாயம் !
அடித்து நொருக்கப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்.
உடனடி நடவடிக்கை தேவை இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் காவல் துறை கவனமுடன் செயலாற்ற வேண்டும்
இவன் A. சையத் அலி
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

காஞ்சி மாவட்ட செயலாளர் (INTJ)

 தூத்துக்குடி மாவட்டம் - செய்துங்கநல்லூரில் இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். அட்டூழியம் - எஸ்.டி.பி.ஐ. கண்டனம். பேச்சுவார்த்தையின் பெயரால் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க கோரிக்கை.

**********************************

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, தமிழக உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், பள்ளிவாசலுக்கு செல்லும் வழி அருகே ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கான இடத்தை தாண்டி, பள்ளிவாசலுக்கு செல்லும் இடத்தை ஆக்கிரமித்து, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் கோவிலை விஸ்தரிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் இடத்தை தாண்டி பள்ளிவாசலுக்கு செல்லும் இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டக் கூடாது என்று தடை விதித்தனர். இந்த தடையையும் மீறி, பகிரங்கமாக நோட்டீஸ் மூலம் அறிவிப்பு செய்துவிட்டு, இன்று (26/03/2017) கட்டிடம் கட்ட முயற்சித்துள்ளது மதவெறிக் கும்பல்.
மதவெறிக் கும்பலின் முயற்சியை தடுக்க முயன்றவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல முஸ்லிம்கள் காயமுற்றுள்ளனர். முஸ்லிம்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை கைது செய்துள்ளது காவல்துறை. மாவட்ட எஸ்.பி.யுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்துச்சென்று, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் உள்பட 30 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
ஏற்கனவே அறிவிப்பு செய்துவிட்டு, இந்த வன்முறையை அரங்கேற்றியவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம்.
நடந்த நிகழ்வினை வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறையில் ஈடுபட்ட மதவெறி இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவர்களை, உடனடியாக கைது செய்ய வலியுறுத்துகிறேன். கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்வதோடு, சட்டத்தின்படி செயல்பட்டு பள்ளிவாசலுக்கு செல்லும் பாதையை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 செய்துங்கநல்லூரில் தொடர்ந்து வரும் பதற்றநிலை

மக்கள் செல்லும் பாதையை முடக்கி கோயில் வழாகம் அமைத்து மதமோதலை ஏற்படுத்த துடிக்கும் RSS பயங்கரவாத காவி கும்பல்...
பல ஆண்டுகளாக கோயிலை சுற்றியுள்ள (நத்தம்) பொறம்போக்கு இடத்தை முஸ்லீம் கிறிஸ்தவ இந்துசகோதரர்கள் என பலர் இந்த இடத்தை பயன்படுத்தி வரும் சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கோயிலை சுற்றி மதில் சுவர் கேட்டுவோம் என்றுகூறி காவி சிந்தனை படைத்தவர்கள் சுவர் எழுப்ப முயற்ச்சி செய்தனர் பிறகு இஸ்லாமிய தரப்பினருக்கு காவிசிந்தனை படைத்தவர்களுக்கு பிரச்சனை வரும் சூழலில் தடுத்து நிறுத்தினர் அரசு அதிகாரிகள்

அதேபோல் கடந்த 2மாதங்களுக்கு முன்பாக இதேபோன்று மதில்சுவர் எழுப்ப திட்டமிட்டு நடைபெறும் சுண்ணத்ஜமாத் பாப்புலர்ப்ரண்ட் தவ்ஹித்ஜமாத் எஸ்டிபிஐ போன்ற அமைப்புகள் எடுத் உறுதியான நிலைப்பாட்டாலும் ஒற்றுமையாலும் மறித்தபோதுமதில்சுவர் கட்டும் நிலைதடைப்பபட்டதுபிறகுஅரசு அதிகாரிகள் தழையிட்டு தாசில்தார் சப் கலேக்டர் தலையிட்டு தடுத்தி நிறுத்தினார்கள் பிறகு நம் தரப்பில் 10 நபர்களும் காவிகும்பல்கள் தரப்பில் 10நபர்களுடனனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரும் வண்ணமாக கோயில் இருக்கும் 6சென்ட்டை தாண்டி வெளியில் வரகூடாது என்று அரசுஅதிகாரிகள் உத்தரவிட்டு ஆர்டரையும் பிறப்பித்தனர் 6சென்டை தாண்டி 4அடி வெளியில் வந்துள்ளனர் இந்த நிலையில் சப்கலெக்டர் முண்ணணியில் நம்மிடம் கெஞ்சியதால் விட்டு கொடுத்த நிலையில் மீண்டும் 6சென்ட் + 4அடியையும் தாண்டி 20ம் தேதி நள்ளிரவு 11;15மணியளவில் 12அடிக்கு படிகள் கட்ட முயற்ச்சித்தனர் அதைஅறிந்த சுண்ணத்ஜமாத் Popular front Tntj sdpi களத்தில் இறங்கி கைதகராறு வரை சென்று மீண்டும் தடுக்கப்பட்டது

*இந்நிலையில் மோதலை ஏற்படுத்தும் வண்ணமாக மீண்டும் நாளை காலை 9:00மணிக்கு மதில் சுவர் கட்டுவோம் என்ற நிலையில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு மக்களை திரட்டீ வருகின்றனர் மதில்சுவர் கட்டப்பட்டால் பள்ளிவாசல்காளுக்கு செல்லமுடியாது ஜனாஷாக்களை கொண்டுசெல்லமுடியாது பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தமுடியாது அருகில் இருக்கும் முஸ்லீம் ஸ்கூல் Ground ஆக பயன்படுத்தமுடியாது. இப்படி காவிகும்பல்கள் மதமோதலையும் கலவரசூழலையும் கொண்டூவர திட்டமிட்டு வெளியூர் மக்களை திரட்டி வருகின்றனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-