அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தடுமாறும் சி.பி.ஐ., வழக்கறிஞர்; அதிரடி காட்டும் மானமிகு ஆ ராஜா
ஒரே விஷயத்தில் மாறி மாறி பேசி, முரண் பாடான வாதங்களை சி.பி.ஐ., வழக்கறிஞர் வைக்க, அதற்கு பதிலடியாக, ராஜா அதிரடி காட்ட, ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதிகட்ட விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.ஐ.,யின் பல்வேறு குற்றச்சாட்டுக் கிளைகளில், மிக முக்கியமானது கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் போய்ச் சேர்ந்த விவகாரம்.முன்னாள் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்ச ரும், தி.மு.க., வைச் சேர்ந்தவருமான, ராஜா, டாடா நிறுவனத்தை புறந்தள்ளிவிட்டு, ஸ்வான் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதற் கான பிரதிபலனாகத்தான், ஸ்வான் மூலம், கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் தரப் பட்டுள்ளது என்பது தான், சி.பி.ஐ.,யின் குற்றச் சாட்டு.டாடா நிறுவனம்
இதற்கு ராஜா தரப்பு அளித்த பதில்:

அரசுக்கு ஏற்கனவே செலுத்த வேண்டிய நிலுவை பாக்கியை, டாடா நிறுவனம் வைத் திருந்தது. பாக்கியில்லா சான்றிதழை, அந் நிறுவனம் இணைக்கவில்லை. அதனால்தான் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது.மூன்று மாதம் கழித்து, பாக்கியில்லா சான்றிதழை அளித்ததும், அதே நாளில், டாடா உரிமம்
கோரியிருந்த கோப்பில் கையெழுத்திட்டு அனுப்பி விட்டேன்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, இறுதிக்கட்ட மறு விசாரணையின்போது, டில்லி, பாட்டியாலா கோர்ட்டில், சி.பி.ஐ., வழக்கறிஞரான குரோவருக்கும், ராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.குரோவர்வாதிடுகையில், ''இந்த விவகாரத்தில், வேண்டு மென்றே, ராஜா தாமதம் செய்தார். இதில், குற்றச் சதி உள்ளது. 200 கோடி ரூபாய் தொடர்புள்ள நிகழ்வு என்பதால், நீதிபதி மிகுந்த கண்டிப்புடன் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டு உள்ளன,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராஜா, ''பாக்கி வைத்துள்ள நிறுவனத்திற்கு கையெழுத்துப் போட்டிருந்தால், உள்நோக்கத்துடன், டாடாவுக்கு சலுகை காட்டு வதற்காக, உரிமம் வழங்கி விட்டார் ராஜா என சி.பி.ஐ., குற்றம் சாட்டியிருக்காதா,'' என்றார்.
இதற்கு குரோவர், ''இது தொடர்பாக, விதிமுறை இருப்பது உண்மை தான். இருப்பினும், பாக்கி யில்லா சான்றிதழ், டாடா போன்ற பழைய நிறுவனங்களுக்கு பொருந்தாது. புதிய நிறுவனங் களுக்கு மட்டுமே பொருந்தும்,'' என்றார்.
புரியவில்லை
இதை சற்றும் எதிர்பாராத ராஜா, தன் வாதத்தில்கூறியதாவது:
சி.பி.ஐ., வழக்கறிஞர் தடுமாறுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை. புதிய நிறு வனங்கள், தங்கள் தொழிலைக் கூட துவங்காத நிலையில்,அரசுக்கு எப்படி பாக்கி வைத்திருப்பார் கள்? அவர்களிடமிருந்து எதற்காக பாக்கியில்லா சான்றிதழை, அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்? இவ்வாறு ஆ.ராசா கேட்க அனைவரும் சிரித்து விட்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-