அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


முத்துப்பேட்டை,மார்ச்.6:

பிளஸ்2 தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவிகள் தலையில் பர்தா அணிய பள்ளி நிர்வாகம் திடீர் தடை விதித்தது. பெற்றோர் திரண்டு போராட முயன்றதால் பள்ளி நிர்வாகம் பர்தா அணிய சம்மதம் தெரிவித்தது.
திருவாரூர் மாவட் டம், முத்துப் பேட்டை, பட்டுக் கோட்டை சாலையில் தனியார் இஸ்லாமிய பெண்கள் மெட்ரிக்குலேசன் பள்ளி உள் ளது. இங்கு 12ம் வகுப்பில் இஸ்லாமிய மாணவிகள் 60 பேர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி பிளஸ்2 தேர்வு தொடங்கியது. இங்கு படிக்கும் மாணவி கள் கோவிலூர் பெண்கள் பள்ளிக்கு சென்று பொது தேர்வு எழுதி வருகின்றனர். அப்போது இஸ்லாமிய மாணவிகள் தலையில் பர்தா போடக் கூடாது என்று அந்த தனியார் பள்ளி நிர்வா கம் தடை போட்டுள் ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் திரண்டு பள்ளி முதல்வரிடம் முறை யிட்டு உள் ள னர். அதற்கு பள்ளி முதல் வர் அரசு உத் த ர வுப் படி நீங் கள் தேர்வு எழுதும் நேரத்தில் தலையில் பர்தா போடக் கூ டாது என்று கூறி உள்ளார். மறு நாள் தேர்வு எழுதுவதை பார்வையிட வந்த கல்வி அதிகாரிகளி டம் இஸ்லாமிய மாாணவிகள் கேட்ட போது பர்தா அணிய அரசு ஏதும் தடை விதிக்க வில்லை.
உங்கள் இஸ்லாமிய கோட்பாடு படி நீங்கள் தாரா ள மாக பர்தா போட்டு வர லாம்” என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தமிழ் நாடு தவ்ஹீத் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் திரண்ட நிர்வாகி கள் நேற் று முன் தினம் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரியை சந்தித்து கேட்டனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் பர்தா அணியலாம் என்று கூறி யது,. இத னை ய டுத்து போராட் டம் நடத்த இருந்த பெற்றோர் கள் போராட் டத்தை ரத்து செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-