அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  

அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகைளில் ஒன்று சவர்மா. இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் தற்போது பிரபலம் அடைந்து வரும் இந்த உணவு மலிவானதாகவும் சுவையாக இருப்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் துபாயில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்காத 141 சவர்மா கடைகளை அதிரடியாக மூடியுள்ளது. 

 25 சதவீத கடைகள் இதன் மூலம் துபாய் நகரில் இருக்கும் 25 சதவீத சவர்மா கடைகளை முடியுள்ளதாகத் துபாய் நகராட்சி அதிகாரி கூறியுள்ளார். துபாயில் இருக்கும் 573 சவர்மா கடைகளில், 425 கடைகளில் சுகாதாரக் குறைபாடு உள்ளது என்று துபாய் உணவு பாதுகாப்புத் துறையில் உணவு பரிசோதனை பிரிவின் தலைவர் சுல்தான் அலி அல் தஹீர் கூறினார்.

 29 புதிய கட்டுப்பாடுகள் 
மேலும் இந்தச் சோதனையின் அடிப்படையில் சவர்மா விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்களுக்குப் புதிதாக 29 கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது துபாய் நகராட்சி. 141 கடைகள் 6 மாதங்களுக்கு முன்னதாகவே கடைகளுக்குப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பிய நிலையில் மூடப்பட்ட 141 கடைகள் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில் விதவிதமான உணவுகள், பல வகையான சுவைகள் கொண்ட உணவிற்கு இந்தியா பெயர்போனதாக இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான உணவகங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பது குறைவாகவே உள்ளது. வாசகர் கருத்து.. இந்தியாவில் உணவகங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும். அல்லது உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளலாம். மக்கள் நலனுக்காக இடம் மற்றும் உணவகத்தின் பெயரை குறிப்பிடவும்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-