அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 

மார்ச்-8
துபாயில் நீதிமன்றங்களில் ஏற்படும் 60 சதவிகித காலதாமதம், ஆண்டொன்றுக்கு 40 மில்லியன் திர்ஹத்திற்கு நிகரான பொருளாதார விரயம் ஆகியவற்றை தடுப்பதை கருத்திற்கொண்டு சிறு குற்றங்களுக்கு 24 மணிநேரத்தில் 2 கட்டங்களாக வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்கள் துபையின் அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்படுவதற்கான புதிய சட்டத்தை துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் நேற்று பிறப்பித்தார்.

புதிய சட்டத்தின்படி செயல்படும் போலீஸ் நிலைய ஒருநாள் விரைவு நீதிமன்றங்களில் கீழ்க்காணும் வகைக்குள் வரும் சிறு வழக்குகளை 3 துறைகளைச் சேர்ந்தவர்கள் உடனுக்குடன் விசாரித்து அன்றே தீர்ப்பு வழங்குவர்,

The General Directorate of Residency எனப்படும் இமிக்கிரேசன் அலுவலர்கள்:
1. சட்டத்திற்கு புறம்பாக அமீரகத்திற்குள் நுழைதல்
2. நாடு கடத்தப்பட்டவர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் வருதல்
3. சட்டத்திற்கு புறம்பாக அமீரகத்திற்குள் தங்கியிருத்தல்
4. தடை செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுதல்
5. தலைமறைவானவர்கள் குறித்த வழக்குகளையும்

துபை காவல்துறையினர்:
1. மதுபானங்களை வைத்திருப்போர்
2. மதுபானங்களை அருந்துவோர்
3. தீயநோக்கத்துடன் காசோலை வழங்குபவர்கள்
4. வங்கிக் கணக்கில் போதிய நிதியின்றி காசோலையின் பின்பக்கம் கையெழுத்திட்டு வழங்குவோர்
5. ஒப்புக்கொண்டபடி கட்டணங்களை உரிய காலத்தில் செலுத்தத் தவறுவோர்
6. பிச்சையெடுத்தல்
7. சட்டத்திற்கு புறம்பான, அனுமதியில்லா வியாபாரிகள் குறித்த வழக்குகளையும்

போக்குவரத்து துறையினர்:
1. காயமடையும் வகையில் விபத்துக்களை ஏற்படுத்தியோர்
2. உடைமைகளை சேதப்படுத்தியோர்
3. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர்
4. பிறர் செல்வாக்கை பயன்படுத்தி போக்குவரத்து குற்றங்களிலிருந்து தப்ப முயல்வோர்
5. சட்டத்திற்கு புறம்பாகவும், போக்குவரத்து விதிகளை மீறுவகையிலும் சட்டவிரோதமாக மதுபானங்களை வைத்திருப்போர்.
6. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல் போன்ற குற்றங்களையும் விசாரித்து உடனடி தீர்ப்புகளை வழங்குவார்கள்.

இத்தகைய விரைவு நீதிமன்றங்கள் பரிசோதனை முயற்சியாக முரக்கபாத் போலீஸ் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதும், இதன் வெற்றியுமே துபை முழுவதும் இத்தகைய நீதிமன்றங்களை திறக்க காரணமாக அமைந்தன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-