அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வளைகுடா நாடுகளில் மட்டும், தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சம் பெண்கள் வேலை செய்வதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.61,843 கோடியை தமிழகத்திற்கு அனுப்புகின்றனர்.


வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களால் இந்தியாவிற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பது குறித்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருதய ராஜன், பெர்னால்ட் டிசோசா சாமி, சாமுவேல் அசிர் ராஜ் ஆகியோர் ஒருஆய்வு நடத்தி உள்ளனர். இந்த் ஆய்வு தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 20,000 வீடுகளில் நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வில் கூறபட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு

2015 ம் ஆண்டு கணக்கீட்டின்படி, 22 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.61,843 கோடியை தமிழகத்திற்கு அனுப்புகின்றனர். இவர்களில் 75 சதவீதம் பேர் இந்துக்கள், 15 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள், 10 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். மொத்த தமிழர்களில் 15 சதவீதம் பெண்கள். தமிழகத்தில் உள்ள 5ல் ஒரு வீட்டைச் சேர்ந்தவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக உள்ளார்.

அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4.1 லட்சம் தமிழர்கள் பணியாற்றுகிறார்கள். யுஏஇ, சவுதி அரேபியா, குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் 11 லட்சம் தமிழர்கள் பணிபுரிகிறார்கள்.

சுமார் 85 சதவீத தமழர்கள் தென்கிழக்கு ஆசியா மற்றம் மேற்கு ஆசியாவில் வசிக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த 86 சதவீதம் பேர் வளைகுடா நாடுகளில் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களின் தாய் - தந்தை இருவருடனும் சேர்ந்து இருப்பதில்லை. 10 லட்சம் தமிழக திருமணமான பெண்கள், கணவன், குழந்தைகளை பிரிந்து வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.


வளைகுடா நாடுகளில் 50 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவிய போதிலும், தமிழர்கள் கடுமையாக உழைத்து 70 சத்வீதத்திற்கும் அதிகமாக பணம் அனுப்புகிறார்கள். கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலம் செல்கின்றனர். ஆனால் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜன்டுகளின் உதவியினாலேயே செல்கிறார்கள்.

வெளிநாட்டில் வேலை செய்யும் 52 சதவீத தமிழர்களின் வயது 20 முதல் 34. வெளிநாடுகளில் வேலை செய்யும் 15 சதவீத பெண்களில் திருப்பூர்(43.9 சதவீதம்), நாமக்கல்(40.9 சதவீதம்) ஆகிய தொழில்துறை மாவட்டங்களில் இருந்தே செல்கின்றனர். குறைந்தபட்சமாக பெரம்பலூர் (1.8 சதவீதம்), ராமநாதபுரம்(2 சதவீதம்), அரியலூர்(2சதவீதம்) மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்.

உள்நாட்டில் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்ளுக்கு இடம்பெயர்ந்தவர்களை பொருத்தவரை, கர்நாடகாவிலேயே அதிகமாக தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதிகபட்சமாக 3.22 லட்சம் பேர் சென்னையில் இருந்து செல்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-