அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பருவமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்புவது ஒரு பக்கம் இருந்தாலும், கோடைகாலமான மே, ஜூன் மாதங்களில் சென்னையில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கமாக உள்ளது. நமக்கு கிடைக்கும் மழையை நாம் இயன்றவரை சேமித்து வைத்துக்கொண்டால் இப்பிரச்சினையிலிருந்து நிச்சயமாக தப்பித்துக்கொள்ளமுடியும். அரசாங்கம் என்ன சார் செய்யுது என கேள்வி எழுப்பி நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பதை விட, நம்மால் முடிந்த அளவுக்கு மழை நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது நல்லது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பற்றி நாம் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தாலும், மழை நீர்சேகரிப்பு தொட்டி மற்றும் உபகரணங்களை நிறுவியிருந்தாலும் நம்மால் இன்னும் தண்ணீர் பிரச்சினையிலிருந்து மீள முடியவில்லை. இக்கட்டுரையில் மழை நீரை இன்னும் எப்படியெல்லாம் சேமிக்க முடியும் என பார்க்கலாம்.


மழைநீர் தொட்டிகள்:
இந்த முறையை நம் வீட்டுக்குள் இருந்தே செயல்படுத்த முடியும். மொட்டை மாடியில் அல்லது வீட்டின் மேற்கூரையில் விழும் மழை நீரை, பிரித்யேக செயற்கை வழித்தட வசதிகள் மூலம் ஒருங்கிணைத்து, அதை பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் நிரப்பிக்கொள்ளலாம். இம்மாதத்தில் அதிசயமாக 100 மி.மீ. மழை கிடைக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். எனவே கிடைக்கும் மழையை குறைந்தது 5 பேரல்களில் சேமித்து வைக்கும்போது 5, 6 வாரங்களுக்கு அந்த நீரை பயன்படுத்த இயலும்.கால்வாய்களுக்கு அனுப்பலாம்
காடு அல்லது வயல்வெளிகளில் பொழியும் மழையை கால்வாய்கள் அமைத்து ஓடைகளுக்கு கொண்டு சேர்க்கலாம். ஓடை வழியாக ஆறுகளுக்கும், ஆறுகள் மூலமாக அணைகளுக்கும் தண்ணீர் சென்றடையும். இதன் மூலம் விவசாயமும் செழிக்கும். இயற்கையான முறையில் மழை நீரானது நிலத்தடி நீரோட்டத்துடனும் இணையும். இதனால் காணாமல்போன நிலத்தடி நீர்மட்டம் திரும்பக் கிடைக்கும். விவசாயத்திற்கும், நகர்புற குடிநீர் தேவைக்கும் பெரிதும் உபயோகமாக இருக்கும். மழை நீர் சேகரிப்பு பணிகளை இளைஞர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டு இயற்கையை காத்திட வேண்டும்.
நிலத்தடி குழாய்கள்:

கிராமப்புறங்களிலும் காட்டுப்பகுதிகளிலும் மட்டும்தான் நிலத்தடி நீரை சேமிக்கமுடியும் என்பதில்லை. நகர்புறங்களிலும் மழை நீரைக் கொண்டு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க இயலும். நிலத்தடி குழாய்கள், மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைப்பதன் மூலம் நகர்களிலும் நிலத்தடி நீரோட்டத்திற்கு உயிர் கொடுக்க இயலும். நகர்ப்புற குடிநீர் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்ய இயலும். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்குமென்றால் புவி வெப்பமயமாதல் தானாக குறையத் தொடங்கிவிடும்.
பொது கிணறுகள்:

கணிசமான மக்கள் தொகை உள்ள பகுதியில் ஒரு பொது இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு கிணறு வெட்டியும் கூட, அப்பகுதியில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க இயலும். இந்த திட்டம் பருவ மழைக்காலத்திற்கு மிக மிக உகந்ததாக இருக்கும். மொத்த மழை நீரும் இந்த கிணற்றுக்குள் சென்றடையுமாறு குழாய்கள் அல்லது காய்வாய்கள் அமைத்து மழை நீரை சேமிக்கலாம்.
மழைநீர் தோட்டம்:

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்படியென்றால் உங்களாலும் மழை நீரை சேமித்து வைக்க இயலும். உங்கள் தோட்டங்களில் புதைக்குழாய்கள் பதித்து, அதன் மூலம் மழை நீரை நிலத்திற்குள் சேமிக்க முடியும். இதற்கான கட்டமைப்பு வேலைகளை செய்து கொடுப்பதற்காக சில சேவை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் நகர்ப்புறங்களில் இதற்காக ப்ரித்யேக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இவ்வசதியை பெற முடியும். இத்திட்டத்தை செயல்படுத்த செலவும் சற்று அதிகம் பிடிக்கும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் நாளைய நீராதாரம் விலை மதிப்பற்றது ஆகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-