அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மார்ச்-03
துபாயில் இன்னும் 4 ஆண்டுகளில் நடைபெறவுள்ள எக்ஸ்போவுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இதன் பூர்வாங்க கட்டுமான வேலைகள் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது. இதன் பணிகள் அனைத்தும் 2019 அக்டோபர் மாதத்தில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றைய நிலையில் எக்ஸ்போ திட்டம் குறித்த சேட்டிலைட் படங்கள் மற்றும் சில விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


கூகுள் மேப் சேட்டிலைட் படங்கள் வழியாக இனி தொடர்ச்சியாக அதன் வளர்ச்சிப்பணிகளை வீட்டிலிருந்தபடியே பார்க்க முடியும். 438 ஹெக்டேர் பரப்பளவில் உருவாகிவரும் இத்திட்டம் நிறைவுற்ற பின் 2020 ஏப்ரல் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு 25 மில்லியன் சர்வதேச பார்வையாளர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மொத்த பட்ஜெட் 25 பில்லியன் திர்ஹமாகும்.

எக்ஸ்போ நடைபெறும் இடத்திலிருந்து இதுவரை 4.7 மில்லியன் கியூபிக் மீட்டர் மணல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மணலைக் கொண்டு ஒலிம்பிக் சைஸ் நீச்சல் குளங்கள் போன்ற சுமார் 1,800 குளங்களை நிறைக்க முடியும்.

Source: Gulf News& 
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-