அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: மார்ச்-5
சவுதியில் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களின் பாஸ்போர்ட்டையும் முதலாளிகள் வைத்திருக்கக்கூடாது என்றும் அவற்றை அந்தந்த தொழிலாளர்களிடமே கொடுத்துவிட வேண்டும் என்ற சட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் அமலில் உள்ள நிலையிலும் பலர் பாஸ்போர்ட்டை தங்களுடனே வைத்துள்ளனர். இவர்கள் உடனடியாக இன்னும் 30 நாட்களுக்குள் முழுமையாக திருப்பியளிக்க வேண்டும், தவறுபவர்கள் ஒவ்வொரு ஊழியரின் பாஸ்போர்ட்டின் மீதும் 2000 ரியால் அபராதம் செலுத்த நேரிடும் என்று சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ஒரு முதலாளிக்கும் ஊழியர்களுக்கும் உள்ள உறவே வேலைக்கான ஓப்பந்த அடிப்படையில் (contractual relationship) மட்டுமே என்றும் அதை தவிர்த்து ஊழியர்களின் தனிப்பட்ட சொந்த ஆவணமான பாஸ்போர்ட்களை முதலாளி தன்னுடன் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2010 ஆண்டு தேசிய மனித உரிமை கமிஷன் பரிந்துரைத்தன் அடிப்படையில், Sponsor (அனுசரணையாளர்), Sponsored (அனுசரணையை பெற்றவர்) போன்ற பதங்கள் ஒழிக்கப்பட்டு மாற்றாக Employer (முதலாளி), Employee (ஊழியர்) போன்ற சொற்களை பயன்படுத்தவும், ஊழியர்கள் தங்களின் குடும்பத்திற்கு விசா எடுக்கவோ அல்லது புனித ஹஜ் யாத்திரை செல்லவோ முதலாளியின் அனுமதி தேவையில்லை என்றும், அதேபோல் முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஓப்பந்தத்திற்கு வெளியே நடைபெறும் எத்தகைய பிரச்சனைகளுக்கும் முதலாளி பொறுப்பாக மாட்டார் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-