அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணி அமர்த்தும் முறையில் பாகுபாடு காட்டுவதாக முதலாளி மீது குற்றம் சுமத்தப்பட்டால், சட்ட விதி 13 படி குற்றம் சாட்டப்பட்டருக்கு 6 மாதம் முதல் 10 வருடம் வரை சிறை தண்டனையும், 50,000 திர்ஹம் முதல் 2 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படுவதாக துபாயை சார்ந்த சட்ட நிபுணர் எச்சரித்துள்ளார்.
தற்காலிக வெளி விளம்பர (Out door Marketing) வேலைக்கு சட்டபூர்வமாக சேர முடியும் என்பதால், பல்வேறு நட்டை சேர்ந்த படிக்கும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களுக்கு தற்காலிக தொழிளாலர் அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சார்ந்திருக்கும் நாட்டையும், வெளித்தோற்றத்தையும், அழகையும் அடிப்படையாக வைத்தே வேலை விளம்பரதாரர்கள் பணி அமர்த்துகிறார்கள் என்று தற்காலிக விளம்பர வேலை புரியும் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் புலம்பெயர்ந்து வாழும் பாகிஸ்தானிய பெண்மணியான ஹிபா கதீர் கூறும் போது, ”40 நாட்கள் சம்பளமாக அவருக்கு AED.4,900 திர்ஹமும், அதே பணியில் ஈடுபடும் ஐரோப்பா & ரஷ்ய நாட்டை சார்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரின் குடியுரிமையை அடிப்படையாக வைத்து பணியமர்த்தல் கிடையாது அது சட்ட விரோதமாகும் என்றும் மாறாக அழகிய தோற்றத்தையும், பேச்சு திறமையையும் கொண்டே சம்பளம் வழங்கப்படுவதாகவும் விளம்பர நிறுவனத்திற்காக பணி புரியும் கன்சல்டண்ட் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக மற்றொரு கன்சல்டண்ட் கூறும் போது, சில நாடுகளின் குடியிரிமையை உடையவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்குவதாகவும் தெறிவித்துள்ளார்.
தொழிளாலர் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதை தொழிளாலர்களுக்கு பாகுபாடு காட்டும் முதாலாளிகளுக்கு அபராதாமும், சிறை தண்டனையும் அளிக்கும் இந்த சிறப்பான சட்டம் தொழிளாலர்களுக்கு உண்மையாகவே உத்வேகத்தை அளிக்கிறது என்றால் அது மிகையில்லை

நன்றி: கீழை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-