அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டம் கள்ளப்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 17 பேர் காயமடைந்தனர்.
அரும்பாவூர்,

சீறிப்பாய்ந்த காளைகள்

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகேயுள்ள கள்ளப்பட்டி கிராமத்தில் நேற்று 17-வது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு அலங் கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் 17 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், அடக்கப்படாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் தங்கநாணயம், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஓடி வந்த காளையொன்று எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இது குறித்து அறிந்ததும் அங்கு வந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் அந்த காளையை கிணற்றில் இருந்து மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-