அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வழுக்கி விழச்செய்கிற பாசான்கள் வாலிபத்தை நீடிக்கச் செய்கிறதாம்...
பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக உணவுக்காக பாசான்களை வளர்க்கும் விவசாயி!
#சுகாதார #வாழ்வைத்தரும் #சுருள்பாசி
தொட்டித் தண்ணீரிலோ, 10நாட்ளுக்கு மேலாக பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்

ணீரிலோ பாசான்பிடித்துவிட்டால் அந்தத்தண்ணீரையே பயன்படுத்தாமல் கொட்டி விடுவோம். ஆனால் அதிலிருந்து உற்பத்தியாகும் பாசான்கள் ஒரு மிகச் சிறந்த சத்துள்ள உணவென்பது பலருக் கும் தெரியாத ரகசியமாகும். டிஸ்கவரி சேனலில் அமேசான் காட்டை அமேசான் ஆற்றை யார் துணையுமின்றிக் கடக்கும் சாகசவீரர் தனது ஒவ்வொரு நாள் முக்கிய உணவாக பாசன்களை சாப்பிடுவதைக் காட்டுவார்கள். இருந்தும் அதனை நம் மூர்க்காரர்கள் மட்டும் நம்ப முடியாமல் தான் இருப்பார்கள். நாம் சாப்பிடும் ஒரு கிலோ உணவில்இருக்கும் சத்துப்பொருள், 10கிராம் பாசானில் இருப்பதென்பது ஆச்சர்யம்தானே.
WHO WHO WHO
எதிர்காலத்துக்கான சிறந்த உணவென்று

(WHO)உலக சுகாதார நிறுவனத்தாலும், விண் வெளி ஆராய்ச்சிக்குசெல்லும்

விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது, ஸ்பைருலினா’ எனப்படும் சுருள் பாசி கள்தான். மிகக்குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களைக்கொண்ட உணவு இதுவாகும். சயனோ பாக்டீரியா குடும் பத்தைச்சேர்ந்த சுருள் பாசியான ஸ்பைருலினா, நல்லத்தண்ணீரில் மிதந்துவாழும் தன்மையைக்

கொண்ட, நீலப்பச்சைப் பாசியாகும்.
1 கிலோ ஸ்பைருலினா உணவு, 1,000 கிலோ காய்கறிகளுக்குச் சமமான சத்

துக்களைக் கொண்டது. எளிதில் செரி மானம் ஆகும் தன்மையும், அதிகளவு புரதமும் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குப் பெரிதும்உதவுகிறது. இத்தகைய பாசான் களை வளர்த்து விற்பனை செய்துவரும் தொழிலில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்ற விவசாயி ஈடுபட் டுள்ளார். இதற்காக தொண்டமாந்துரை சாலையில் நவீன பண்ணை அமைத்துள் ளார்.
22அடி அகலம், 85அடி நீளமுள்ள தண்ணீர்த்தொட்டியாக, இணைந்த நிலையில் 2தண்ணீர்த் தொட்டிகளையும், தண்ணீர்த் தேவைக்காக போர்வெல்லும், மின் மோட்டார் வசதியும் பண்ணையி லேயே அமைத்துள்ளார். இதன்மூலம் ஒவ்வொரு தொட்டியிலும் 25cm உயரத் திற்கு 40ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிரப்பி, தண்ணீர் தொட்டியிலேயே சுழன்று வரும் வகையில் தண்ணீரைத் தள்ளக் கூடிய மின்விசிறிகளை அமைத்து, குழாய்களைக் கொண்டு துடுப்புபோல் பயன்படுத்தி தண்ணீரை கிண்டிக்கொ ண்டே இருக்கிறார்.
பாசான் வளர்ப்புகுறித்து தங்கராசு தெரிவித்தாவது : சென்னையில் இந்தத்

தொழில் நுட்பத்தை நேரில்பார்த்து அறிந்துகொண்டு இங்குவந்து சொந்த ஊரில் தொடங்கியுள்ளேன். இதற்காக ரூ11லட்சம் செலவுசெய்துள்ளேன். தரமான பாசான் விதைகளை ஆரம்பத்தில் சென்னையில் கிலோ ரூ1500த்திற்கு வாங்கிவந்தேன். அதுஒன்றே இனி தொடர்ந்து உற்பத்திசெய்ய போதும். மழை, பனி இல்லாமல், நல்ல வெயில் அடித்தால், ஒருமாதத்தில் 120கிலோ முதல் 150கிலோவரை பாசான்களை

உற்பத்தி செய்யமுடியும். நல்ல வெயில்தான் பாசான்களை உருவாக்கும். ஏப்ரல், மேமாதங்களில் ஒரு

நாளைக்கு அதிகப்பட்சம் 6கிலோ பாசான்கள் என மாதத்திற்கு 180முதல் 200கிலோ வரை உற்பத்திசெய்ய முடியும். ஒருகிலோ உற்பத்திக்கு ரூ300 முதல் ரூ350 வரை செலவாகும். உற்பத்தியான பாசான்களை கிலோ ரூ700க்கு விற்பனை செய்யமுடியும். நல்ல பாசான் விதை களைத் தயாரித்தால் அவை கிலோ ரூ1500வரை விலைபோகும் என்றார்.

உற்பத்தி செய்த பாசான்களை முருக்கு போல் பிழிந்து மிதமான வெப்பநிலையில் உலர வைத்து பேக்கிங்செய்தும் கொடுக் கிறார்.
இவை பெருநகர சூப்பர் மார்க்கெட்டுகளில் பாக்கெடுகளாகவும், கேப்ஸ்யூல்களாக வும் (டியூப்) நவீனமுறையில் விற்ப னைக்கு வருகிறது. ஓட்டப்பந்தய

வீரர்கள் ஊக்கமருந்தாக சாப்பிடுவது இந்தப் பாசான்கள் அடங்கிய

கேப்ஸ்யூல்களைத்தான். துல்லியமாகத் திட்டமிட்டு உழைத்தால் முதலீடுசெய்த

பணத்தை ஓராண்டுக்குள் எடுத்து விடமுடியும் என்பது தங்கராஜின்

அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.
#பாசான்களின் #பயன்கள் ....
ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசியை சாப்பிடுவதால், உடலில் நோய்எதிர்ப்பு

சக்தி அதிகரிக்கிறது. பிபி, சுகர்லெவல் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. கண் பார்வைத்திறன் அதிகரிக்கிறது. புற்று நோய் வராமல் தடுக்கிறது. குடல் புண்ணை குணப் படுத்துகிறது. C வைட் டமின் தவிர அனைத்து வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உடலில் தேவை யற்ற கொழுப்பை அகற்றுகிறது. வழுக்கி விழச்செய்கிற பாசான்கள்தான் வாலி பத்தை நீட்டிக்கச்செய்து, இளமையை நீடித்துவாழ வழிவகுக்கிறது என உலக சுகாதார நிறுவனமே ஒப்புக்கொண்டுள் ளது குறிப்பிடத் தக்கது.
-நன்றி:WILSON .J #PERAMBALUR

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-