அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய் : துபாய் அரசானது பறக்கும் காரை ஜுலை மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
உலகிலேயே அதிகமாக சுற்றுலா பயணிகள் வரும் நாடாக துபாய் உள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக அந்த நாட்டு போக்குவரத்து துறை பல்வேறு புதிய முயற்றிகளில் ஈடுப்பட்டுவர்கிறது.

இந்தநிலையில் பைலட் இல்லாத பறக்கு கார்களை அந்த நாட்டு போக்குவரத்து துறை சோதனை செய்துள்ளது. சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த வகையான பறக்கும் கார்களை துபாய் போக்குவரத்து துறை சில காலங்களுக்கு முன்னர் சோதனை செய்துள்ளது.


இந்த வகையாக கார்களுக்கு ஹோவர் டாக்சி எனப்பெயரிடப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்ததாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும்.

மேலும் இந்த வகையான கார்களை இயக்க ஓட்டுநர்கள் தேவையில்லை. பயணி எந்த இடத்திற்கு செல்லவேண்டுமோ அந்த இடத்தை அதில் கட்டமைக்கப்பட்ட புரோகிராமில் குறிப்பிட்டால் அந்த இடத்திற்கு நம்மை கொண்டு சென்று விடும். இந்த காரானது வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-