அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பிப்-15
துபையில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக 1000 திர்ஹத்திற்கு மேல் அபராதங்கள் செலுத்த வேண்டியுள்ளவர்கள் புதிய வசதியின் படி, பர்ஸ்ட் கல்ப் பேங்க் (FGB) கிரடிட் கார்டு மூலம் செலுத்தவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

வட்டியில் இல்லா தவணைமுறை என்று சொல்லப்பட்டுள்ள இத்திட்டத்தின் வழியாக 3, 6, 9 மற்றும் 12 மாதத் தவணைகளில் பிரித்து அபராதங்களை செலுத்தலாம். இதற்கு துபை போலீஸ் ஆப் (Dubai Police App), போலீஸ் இணையதளம் (Police Website) அல்லது சேவை மையத்திற்கு (Service Center) நேராக சென்றோ இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோன்றதொரு ஒப்பந்த வசதியை கடந்த வருடம் முதல் அபுதாபி கமர்ஷியல் பேங்குடனும் (ADCB), 2014 ஆம் ஆண்டு முதல் எமிரேட்ஸ் என்பிடி பேங்குடனும் (Emirates NBD) துபை போலீஸ் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றதொரு வசதியை இம்மாத ஆரம்பத்தில் ஷார்ஜா போலீஸூம் துவங்கி இருப்பது நினைவுகூறத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-