அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பிப்-13
சவுதி அரேபியா, அல் கஸீம் பிரதேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் அல் அப்ரி (Abdulrahman al-Abri ), இவர் பழமையான வாகனங்களை சேகரிக்கும் வழக்கமுள்ளவர். இவரிடம் 100க்கு மேற்பட்ட பழமையான வாகனங்கள் உள்ளன. இவற்றில் பல 1946 ஆம் ஆண்டுக்கு முன் புழக்கத்தில் இருந்தவை என்பதுடன் இந்த பழைய வாகனங்களில் 50 சதவிகிதம் பழுது நீக்கப்பட்டு இன்னும் இயங்கும் நிலையில் உள்ளன. மற்றவைகளுக்கு அதன் உதிரி பாகங்கள் கிடைக்காததால் அப்படியே உள்ளன.

2006 ஆம் ஆண்டு இன்றைய சவுதி மன்னர் சல்மான் அவர்கள் ரியாத் மாகாண கவர்னராக இருந்த பொழுது அப்துல் ரஹ்மான் அல் அப்ரியின் பழமையான கார்களின் அருங்காட்சி மையத்தை பார்வையிட்ட போது இந்தப் படத்திலுள்ள 'டிரக்' வாகனத்தின் பெயர் 'டாஸ்மன்' (Dasman) என்றும் இதை பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் குதிரைகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்துவோம் என்ற அரிய தகவலையும் பசுமையான பழைய நினைவுகளையும் அல் அப்ரியிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அல் அப்ரி சுமார் 22 வருடங்களுக்கு முன் இந்த பழமையான டாஸ்மன் டிரக் வாகனத்தை வாங்கியிருந்தார். இந்த டிரக்கை மீண்டும் இயங்க வைப்பதற்கு தேவையான உதிரி பாகங்களை அமெரிக்காவில் ஆர்டர் செய்து மீண்டும் இயங்க வைத்து மன்னருக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

தற்போது மன்னரின் அல் அஜ்வா அரண்மனைக்கு அல் அப்ரி சென்றபோது, மன்னர் சல்மான் அவர்கள் இளமையில் நேசித்த அந்த பழமையான டிரக் அரண்மனை முன்பு பழம்பெருமையை போற்றும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டு மிகவும் பூரித்துப்போய் இச்செய்தியை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் அப்துல் ரஹ்மான் அல்அப்ரி.

Source: http://english.alarabiya.net/
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-