அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பிப்-07
முஸ்லீம்களின் புனிதத் தலமான மக்கா ஹரம் ஷரீஃபில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் புனித கஃபாவின் அருகில் தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொள்ள முயன்றபோது யாத்ரீகர்கள் மற்றும் புனித ஹரம் ஷரீஃப் போலீஸாரால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

புனித கஃபாவுக்கான போலீஸ் விடுத்துள்ள அறிக்கையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் புனித கஃபாவின் கிஸ்வா துணிகளை எரிக்க முயன்றார் என்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலையும் மறுத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

Source: http://english.alarabiya.net/
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-